கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவசர நிலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு.. சிறிசேனா திடீர் முடிவு.. என்ன நடக்கிறது இலங்கையில்?

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் மேலும் ஒரு மாதத்திற்கு அவசர நிலை நீடிப்பு செய்யப்படுவதாக, அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். ஈஸ்டர் தினத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு, இன்றுடன் அது காலாவதியாகும் நிலையில், மேலும் ஒரு மாதத்திற்கு 'பொது அவசர நிலை' நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதிபர், மைத்ரிபால சிறிசேன இன்று வெளியிட்ட, ஒரு ஆணையில், நாட்டில் "பொது அவசரநிலை" இருப்பதாக நம்புவதாகவும், அவசரகால நிலையை நீட்டிக்கும் வகையில், பொது பாதுகாப்புச் சட்டத்தில் ஏற்பாடுகளைச் செய்வதாகவும் கூறினார்.

சந்தேக நபர்களைக் கைதுசெய்து கைது செய்ய, காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு, பெரும் அதிகாரங்களை வழங்குவதுதான் அவசர நிலை பிரகடனத்தின் நோக்கமாகும்.

கைதுகள்

கைதுகள்

கொழும்பில் மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு ஹோட்டல்களில் ஏப்ரல் மாதம், ஈஸ்டர் ஞாயிறுதினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 10 பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் போலீஸ் காவலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவை மாற்றினார் அதிபர்

முடிவை மாற்றினார் அதிபர்

முன்னதாக, கடந்த மே மாத இறுதியில், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளுக்கு சிறிசேனா ஒரு வேண்டுகோள்விடுத்தார். இலங்கையில், பாதுகாப்பு நிலைமை "99 சதவிகிதம் இயல்பு நிலைக்கு திரும்பியது" என்றும், ஜூன் 22க்குள் அவசரகால சட்டங்கள் நீக்கப்படும் என்றும் அப்போது சிறிசேனா கூறினார். ஆனால், இன்று மேலும் 1 மாத காலத்திற்கு அவசர நிலையை நீடிப்பு செய்துள்ளார் சிறிசேனா.

எதற்காக இப்படி

எதற்காக இப்படி

சிறிசேனா ஏன் தனது திட்டத்தை மாற்றிக்கொண்டார் என்று அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்த விளக்கமும் வரவில்லை, ஆனால் தலைநகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இன்னும் கூட இலங்கை பாதுகாப்பு விஷயத்தில் அதிபருக்கு முழு திருப்தி ஏற்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. சிறிசேனா ஏன் தனது திட்டத்தை மாற்றிக்கொண்டார் என்று அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்த விளக்கமும் வரவில்லை, ஆனால் தலைநகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இன்னும் கூட இலங்கை பாதுகாப்பு விஷயத்தில் அதிபருக்கு முழு திருப்தி ஏற்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

அவசரகால பிரகடனத்தை அதிகபட்சமாக ஒரு மாதத்திற்குதான் அறிவிக்க முடியும், மேலும் 10 நாட்களுக்குள் பாராளுமன்றம் அதை அங்கீகரிக்க வேண்டும் என்பது அங்குள்ள சட்டமாகும். இலங்கையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பிற முக்கிய இடங்களை தீவிரவாதிகள் தாக்கவிருப்பதாக இந்திய உளவுத்துறை தகவல் கொடுத்தும், இலங்கை அரசு கோட்டை விட்டதாக, சிறிசேன விமர்சிக்கப்பட்டார். பாராளுமன்ற பொது விசாரணை குழு வெளியிட்ட அறிக்கையொன்றில், பாதுகாப்பு மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகவும் இருக்கும் சிறிசேனா, முறையாக, தேசிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறிவிட்டதாகக் கூறியிருந்தது.

English summary
After assuring Colombo-based diplomats that he will allow the state of emergency to lapse on June 22, Maithripala Sirisena has extended it by a further month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X