கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இருளில் மூழ்கிய இலங்கை.. 10 மணிநேரம் மின்சாரம் இல்லாமல் தவிப்பு- மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம்

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் திங்கள்கிழமையன்று சுமார் 10 மணிநேரம் மின்சார விநியோகம் தடைபட்டதால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. இதேபோன்ற மின்தடை மீண்டும் ஏற்படும் நிலை உருவாகி உள்ளதாக இலங்கை மின்சார வாரியம் எச்சரித்துள்ளது.

இலங்கையின் கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று பிற்பகல் பழுது ஏற்பட்டது. இதனால் இலங்கை முழுவதும் மின்சார விநியோகம் தடைபட்டது.

Sri Lanka Faces countrywide power outage on Monday

பெரும்பாலான இடங்களில் சிக்னல்கள் இயங்கவில்லை. இந்த மின்தடையானது சுமார் 10 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் ஒட்டுமொத்த இலங்கையும் கடும் பாதிப்பை எதிர்கொண்டது.

2016-ம் ஆண்டு இதேபோல் மிகப் பெரிய மின்தடையை பல மணிநேரம் இலங்கை அனுபவித்தது. தற்போது 4 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் மிகப் பெரும் மின்தடை நிகழ்ந்துள்ளது.

அத்துடன் இந்த மின்தடையால் நுரைச்சோலை மின்நிலையமும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இதனால் மீண்டும் இலங்கை மிகப் பெரும் மின்தடையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் இலங்கை மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேய் பிறையில் மாணவர் சேர்க்கை.. நிறைந்த அமாவாசையில் டாஸ்மாக் கடை திறப்பு.. வருந்தும் பெற்றோர்தேய் பிறையில் மாணவர் சேர்க்கை.. நிறைந்த அமாவாசையில் டாஸ்மாக் கடை திறப்பு.. வருந்தும் பெற்றோர்

Recommended Video

    King Ravana குறித்த ஆய்வில் இறங்கிய Sri Lanka | World's First Aviator |Oneindia Tamil

    தற்போதைய மின்தடைக்கு பின்னால் எந்த ஒரு சதித் திட்டமும் இல்லை எனவும் இலங்கை அரசு வட்டாரங்கள் திட்டவட்டமாக தெரிவித்தும் உள்ளன.

    English summary
    Sri Lanka experienced a countrywide power outage due to a transmission failure in part of power grid.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X