கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3 பெண்கள்.. 6 ஆண்கள்.. இவர்கள்தான் தாக்குதல் நடத்திய குழுவா? புகைப்படம் வெளியிட்ட இலங்கை அரசு!

இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்பட கூடிய 9 பேரின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கை மனித வெடிகுண்டு வெடிப்புகள்.. 7 தீவிரவாதிகளின் பெயர்கள் வெளியானது!- வீடியோ

    கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்பட கூடிய 9 பேரின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

    கடந்த ஞாயிறு அன்று இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

    கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச், சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது. இதுகுறித்து வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

    இலங்கையில் தீவிரவாதியை விரட்டி தன் உயிரை கொடுத்து நூற்றுக்கணக்கான உயிர்களை காத்த ஹீரோ ரமேஷ் ராஜூ! இலங்கையில் தீவிரவாதியை விரட்டி தன் உயிரை கொடுத்து நூற்றுக்கணக்கான உயிர்களை காத்த ஹீரோ ரமேஷ் ராஜூ!

     வீடியோக்கள் வெளியானது

    வீடியோக்கள் வெளியானது

    இது தொடர்பாக நிறைய வீடியோக்கள் இணையத்தில் வெளியானது. நீர்கொழும்பு சர்ச்சில் நடந்த குண்டுவெடிப்பு குறித்த வீடியோக்கள் வெளியானது. அதன்பின் ஷங்கிரி லா ஹோட்டலில் நடந்த குண்டுவெடிப்பு, சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் நடந்த குண்டுவெடிப்பு இரண்டு குறித்த வீடியோவும் வெளியானது.

     குடும்பம் விசாரணை

    குடும்பம் விசாரணை

    அதேபோல் இந்த குண்டுவெடிப்பில் புதிய திருப்பமாக நேற்று முகமது யூசுப் இப்ராஹிம் என்பவரின் குடும்பம் விசாரிக்கப்பட்டது. இவர்கள் குடும்பம் இலங்கையில் மிகவும் பணக்கார குடும்பம் ஆகும். இவரின் மகன்கள் இன்சாப் அஹமது இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் அஹமது இப்ராஹிம் ஆகியோர் குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது

     இலங்கை எப்படி

    இலங்கை எப்படி

    இந்த நிலையில் தற்போது இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்பட கூடிய 9 பேரின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இலங்கை அரசு தீவிரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டது. இதில் 3 பெண்களின் புகைப்படங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

     எத்தனை கைது

    எத்தனை கைது

    இலங்கையில் இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்களிடம் கடுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. ஐஎஸ் அமைப்பு தனது அதிகாரப்பூர்வ அமாக் இணைய பக்கம் மூலமாக இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

    English summary
    Sri Lanka government releases 9 suicide bombers photos after 4 days of the attack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X