கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 நேரமும் சோறுதான்.. கைவிலங்கு கொஞ்சம் நெளிஞ்சிருக்கு.. போலீஸ் ஸ்டேஷனுக்கு ரிவ்யூ எழுதிய கைதி!

Google Oneindia Tamil News

கொழும்பு: நாட்டில், எதற்கெடுத்தாலும் இப்போ ரிவ்யூ தேவைப்படுகிறது. சினிமாவுக்குதான் முன்பெல்லாம் விமர்சனம் இருந்தது. கூகுள் மேப் வந்த பிறகு, பெட்டிக்கடைகள் முதல் பெரு நிறுவனங்கள் வரை அனைத்து வர்த்தக நிறுவனங்கள் பற்றியும், ரிவ்யூவை படித்துவிட்டு, எத்தனை ஸ்டார் இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு செல்வோர் இப்போது அதிகம்.

ஆனால், இதையெல்லாம் கூட ஏற்க முடியும். காவல் நிலையத்திற்கு ரிவ்யூ எழுதினால்? அதிகாரிகள் நல்லவர்கள், அல்லது, வில்லங்கமானவர்கள் என்று எழுதினால் கூட பரவாயில்லை.

கைது செய்த என்னை நன்கு கவனித்தார்கள் என்று கைதான ஒருவரே ரிவ்யூ எழுதினால்? நினைத்து பார்க்கவே சுவாரசியமாக இருக்கிறதா.

என் கூட மட்டும்தான்.. டெய்லி சண்டை போட்டேன்..கடைசியில் எரிச்சுட்டேன்.. ஆஷாவின் திகில் வாக்குமூலம்என் கூட மட்டும்தான்.. டெய்லி சண்டை போட்டேன்..கடைசியில் எரிச்சுட்டேன்.. ஆஷாவின் திகில் வாக்குமூலம்

4 ஸ்டார் போலீஸ் ஸ்டேஷன்

4 ஸ்டார் போலீஸ் ஸ்டேஷன்

ஆனால் உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில், காலே சாலையில் அமைந்துள்ளது, கொல்லுபிட்டியா என்ற காவல் நிலையம். இதற்கு கூகுள் மேப் மூலமாக 27 விமர்சனங்கள் வந்துள்ளன. இந்த காவல் நிலையம் 4.1 ஸ்டார்களை பெற்றுள்ளது.

ரிவ்யூ

காவல் நிலையத்திற்கு இவ்வளவு அதிக ஸ்டார் கிடைத்ததே முதலில் பெரிய விஷயம்தான். அதுதவிர, விஜேசேகரா பத்துர்ஜான் என்பவர் எழுதிய ரிவ்யூதான் டாப். இவர் அந்த போலீஸ் ஸ்டேஷன் லாக்அப்பில் அடைக்கப்பட்ட மாஜி கைதி என்பதே இந்த ரிவ்யூ இப்போது வைரலாக காரணம்.

சுத்தமா இருக்கு

சுத்தமா இருக்கு

தனது விமர்சனத்தில் அப்படி என்னதான் எழுதியுள்ளார் என்று பாருங்கள்: இப்படித்தான், ஒருமுறை நான் இந்த போலீஸ் நிலைய போலீஸ்காரர்களால் கைது செய்யப்பட்டேன். அடையாள அட்டை இல்லை என கைது செய்துவிட்டனர். என்னை நன்கு கவனித்துக் கொண்டனர். லாக்அப் நல்லா பெருசாகவும், சுத்தமாகவும் இருந்தது. உணவு ஓகேதான், இருந்தாலும் 3 முறையும் சோறு மட்டுமே கொடுத்ததால் கொஞ்சம் போரானது.

விலங்கு நெளிஞ்சி போச்சி

விலங்கு நெளிஞ்சி போச்சி

கைவிலங்கு கொஞ்சம் நெளிந்து போய் இருந்தது. ஆனால் அதன் வேலையை அது சரியாகத்தான் செய்தது என்பதால், ஓகேதான். அதிகாரிகள் நட்போடு பழகினர். மொத்தத்தில் அது ஒரு நல்ல அனுபவம். இப்படி ஏதோ ரிசார்ட்டில் தங்கிவிட்டு வந்தவர் போல ரிவ்யூ எழுதியுள்ளார் அந்த நபர். காலக்கொடுமைதான் இது.

English summary
Got arrested for not carrying my identity card, treated me very well. cells are spacious and clean. Food was ok but rice for 3 times is bit boring. Handcuff was bit corroded but it's ok it does the job right. The officers are friendly. Overall it was a nice experience, a former prisoner writes review in google map.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X