கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு.. எச்சரிக்கும் உளவுத்துறை.. இலங்கையில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இலங்கையில் கடந்த மாதம் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து மீண்டும் தீவிரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் கடந்த மாதம் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து மீண்டும் தீவிரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து அந்நாட்டு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த மாதம் 21ம் தேதி ஞாயிறு அன்று இலங்கையில் வரிசையாக குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. சர்ச், பொதுஇடங்கள், ஹோட்டல்களில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

Sri Lanka may face another attack: Intelligence warns Government for safety precautions

450க்கும் அதிகமானோர் இதில் காயம் அடைந்தனர். இதில் இன்னும் பலர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது.

இலங்கையில் நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்தான் சரான் ஹாசிம். இவர் ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு காரணமான எல்லோரையும் அந்நாட்டு ராணுவம் தீவிரமாக தேடி வருகிறது. இலங்கை மட்டுமில்லாமல் இந்தியாவிலும் இதற்கான சோதனை நடந்து வருகிறது.

அப்பாவை பற்றி பேசுவது இருக்கட்டும்.. முடிந்தால் இதை பேசுங்கள்.. மோடிக்கு பிரியங்கா சவால்! அப்பாவை பற்றி பேசுவது இருக்கட்டும்.. முடிந்தால் இதை பேசுங்கள்.. மோடிக்கு பிரியங்கா சவால்!

இந்த நிலையில் இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து அந்நாட்டு உளவுத்துறையும், சுற்றுலாத்துறை அமைச்சகமும் எச்சரித்துள்ளது.

அதன்படி இலங்கையில் உள்ள நாவலை நகரம், வெள்ளவத்தை, பஞ்சிகாவத்தை, கொழும்பு கோட்டை ரயில் நிலையம் ஆகிய இடங்களில் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் தற்போது போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைகள் அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

English summary
Sri Lanka may face another attack: Intelligence warns the Government to make safety precautions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X