கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்

இலங்கையின் மூத்த அரசியல் தலைவர் மற்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இன்று காலமானார்.

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை அமைச்சரும் இந்திய வம்சாவளி தமிழர்களின் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் ( ஆறுமுகம் தொண்டமான்) இன்று காலமானார்.

இலங்கை வம்சாவளித் தமிழர்களின் முதுபெரும் தலைவராக திகழ்ந்தவர் செளமியமூர்த்தி தொண்டமான். இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்களின் முகமாக திகழ்ந்தவர் செளமியமூர்த்தி தொண்டமான். அவரது பேரனான ஆறுமுகன் தொண்டமான் 1990களில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தார். தற்போது அதன் தலைவராக இருந்து வந்தார்.

Sri Lanka Minister Arumugam Thondaman dies after fall in home

என்ன செய்தீர்கள்? பிறமாநில தொழிலாளர் பிரச்சனை.. மத்திய, மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!என்ன செய்தீர்கள்? பிறமாநில தொழிலாளர் பிரச்சனை.. மத்திய, மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

1994-ல் இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வென்று எம்.பி.யானார். இதனைத் தொடர்ந்து பல்வேறு தேர்தல் வெற்றிகள் மூலமாக இலங்கை அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பதவி வகித்தவர் ஆறுமுகன் தொண்டமான். தற்போதும் தோட்ட உட்கட்ட அபிவிருத்தித் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார்.

இன்று மாலை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லேவை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்திருந்தார். இது தொடர்பான படங்களை இலங்கைக்கான இந்திய தூதரகமும் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

Sri Lanka Minister Arumugam Thondaman dies after fall in home

கடைசி பதிவு

இதேபோல் ஆறுமுகம் தொண்டமானும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களை இன்றைய தினம் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவினர்களான கௌரவ பிரதமர் அவர்களின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் , முன்னாள் மாகாண அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் இ.தொ.கா வின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினர். இதன் போது இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 10000 வீடமைப்பு திட்டம் தொடர்பாக ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது. ற்றும் முன்னைய வீடமைப்பு திட்டத்தில் குடிநீர், மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு விடயங்களில் காணப்பட்ட குறைபாடுகளை எதிர்வரும் காலங்களில் எவ்வாறு நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது என பதிவு செய்திருந்தார். 2 மணிநேரங்களுக்கு முன்னர் பதிவிட்ட இதுதான் ஆறுமுகன் தொண்டமானின் கடைசி பதிவாகும்.

இந்த நிலையில் இன்று இரவு ஆறுமுகன் தொண்டமான் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதால் ஆறுமுகன் தொண்டமான் உயிர் பிரிந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழர்களின் மலையகப் பிரதேசம், ஆறுமுகன் தொண்டமான் மறைவால் பெருந்துயரத்தில் மூழ்கியுள்ளது.

English summary
Sri Lanka Minister Arumugam Thondaman dies after fall in home today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X