கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை அதிபர் சிறிசேனா அதிரடி.. பாதுகாப்பு செயலாளர், காவல்துறை தலைவர் டிஸ்மிஸ்

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை குண்டு வெடிப்பு விவகாரத்தினால் அதிருப்தியடைந்துள்ள, அந்த நாட்டு அதிபர் சிறிசேனா, நாட்டின் இரு மிக முக்கிய அதிகாரிகளை பதவி விலக உத்தரவிட்டுள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ மற்றும் காவல்துறை தலைவர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோர்தான் நடவடிக்கைக்கு உள்ளாகியோர் ஆகும்.

Sri Lanka: President asked the police chief and defence secretary to quit

குண்டு வெடிப்புகள் குறித்து உளவுத்துறை முன்கூட்டியே தகவல் அளித்தும், அதிபர் மற்றும் பிரதமருக்கு, அந்த தகவலை இவர்கள் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதிபர் அதிரடியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதற்கிடையே, பாதுகாப்புத்துறை அமைச்சரும் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உளவுத்துறை தகவலை அவர்கள் மறைத்துவிட்டார்கள்.. உண்மை விரைவில் வெளிவரும்.. இலங்கை அமைச்சர் பரபரப்பு!உளவுத்துறை தகவலை அவர்கள் மறைத்துவிட்டார்கள்.. உண்மை விரைவில் வெளிவரும்.. இலங்கை அமைச்சர் பரபரப்பு!

இலங்கை உளவுத்துறை மட்டுமின்றி, இந்தியா, அமெரிக்கா ஆகிய பன்னாட்டு உளவு அமைப்புகளும், தேவாலய குண்டு வெடிப்பு குறித்து முன்கூட்டியே, எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியான நிலையில் சிறிசேனா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் சிக்கி, 359 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sri Lankan President Maithripala Sirisena has asked the police chief and defence secretary to quit following the Easter Sunday suicide bomb attacks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X