கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை அதிபர் சிறிசேனா முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை.. புதிய பரபரப்பு!

இன்று காலை இலங்கை அதிபர் சிறிசேனா முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Google Oneindia Tamil News

கொழும்பு: இன்று காலை இலங்கை அதிபர் சிறிசேனா முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இலங்கை அரசியலில் அடுத்தகட்ட பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இன்று அங்கு நாடாளுமன்றம் கூட இருக்கிறது. இதையடுத்து இலங்கை தலைநகர் முழுக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையின் பிரதமராக ரணில் பதவி ஏற்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்காக இன்று அவர் பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வருகிறது. இன்று நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில் அதிபர் சிறிசேனா முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இன்று கூடுகிறது

இன்று கூடுகிறது

இலங்கையில் இன்று நாடாளுமன்றம் கூடுகிறது. நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்துள்ளார். இதில் ரணில் விக்ரமசிங்கே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வருகிறது. நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்துள்ளார்.

ஆலோசனை நடத்தினார்

ஆலோசனை நடத்தினார்

இந்த நிலையில் இன்று இலங்கை அதிபர் சிறிசேனா முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நேற்று பாதுகாப்பு அமைச்சரவையை சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். இன்று நடந்த ஆலோசனையில் மூன்று படையை சேர்ந்த தளபதிகளும், உயர் ரேங்க் வீரர்களும் கலந்து கொண்டனர்.

என்ன ஆலோசனை

என்ன ஆலோசனை

ஆனால் சிறிசேனா ஆலோசனையில் என்ன விவாதம் செய்தார் என்ற விவரம் வெளியாகவில்லை. இலங்கையின் பாதுகாப்பு குறித்தும், சட்ட ஒழுங்கு குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் நாடாளுமன்றம் கூட நிலையில் இவர்கள் ஆலோசனை செய்த காரணத்தால் இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அனைத்து கட்சி கூட்டம்

அனைத்து கட்சி கூட்டம்

இதற்கு இடையில் இன்னும் சற்று நேரத்தில் அங்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. நாடாளுமன்றம் கூடும் முன் அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளார்.

English summary
Sri Lanka President Srisena meets Army force officials as parliament meets today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X