கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கையில் அதிபர் தேர்தல் தேதி .. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதிகளை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சவை வீழ்த்தி மைதிரிபால சிறிசேன வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த 4 வருடங்களாக ஆட்சியில் இருந்து வருகிறார் அதிபர் சிறிசேன.

sri lanka Presidential polls between Nov 15 -December 7

இந்நிலையில் இலங்கை தலைமை தேர்தல் ஆணையர் மகிந்தா தேசபிரியா அந்நாட்டு அதிபர் தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கையில் நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரை அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல் தேதியை மாற்றும் அதிகாரம் அதிபர் சிறிசேனவுக்கு மட்டுமே உள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும் தேர்தல் தேதிகளை முன்கூட்டியே அறிவிக்க மட்டும் அதிபருக்கு அதிகாரம் உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள காலக்கெடுவை தாண்டி ஒத்திவைக்க அவருக்கு அதிகாரம் இல்லை என்றார். தேர்தல் தேதி தொடர்பாக சபாநாயகர், பிரதமர், அதிபர், ஆகியோருடன் முன்பு ஆலோசிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையர் தேசபிரியா தெரிவித்தார்.

English summary
sri lanka Elections Commission Chairman Mahinda Deshapriya said that The presidential election will be held between November 15 and December 7.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X