கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனாவின் தடுப்பூசி ரொம்ப மோசம்... உங்க தடுப்பூசியே போதும்.. இந்தியாவிடம் தடுப்பூசி கோரும் இலங்கை

Google Oneindia Tamil News

கொழும்பு: சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி மருத்துவ சோதனைகள் முழுமையாக நிறைவடையாததால் இந்தியாவின் சீரம் தடுப்பூசியை மட்டும் பயன்படுத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

ஆக்ஸ்போர்ட் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை தான் புனேவிலுள்ள சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்கிறது. வளரும் நாடுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்து, விநியோகிக்கும் பொறுப்பு சீரம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல இந்திய அரசும் இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இலவசமாக சீரம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. சீரம் தடுப்பூசிகளைக் கொண்டு பல நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்கிவிட்டன.

சீனா தடுப்பூசி வேண்டாம்

சீனா தடுப்பூசி வேண்டாம்

அதன்படி இலங்கையிலும் தற்போது செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. முன்னதாக, பொதுமக்களுக்கு தடுப்பூசியை வழங்க சீரம் தடுப்பூசியுடன் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியையும் பயன்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டிருந்தது. சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் மருத்துவ சோதனை இன்னும் முழுமையாக நிறைவடையாததால், சினோபார்மை பயன்படுத்த வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய தடுப்பூசி போதும்

இந்திய தடுப்பூசி போதும்

இலங்கை அரசு தன் நாட்டிலுள்ள 1.4 கோடி மக்களுக்கு சீரம் நிறுவனத்தின் தடுப்பூசியை மட்டுமே செலுத்த மட்டுமே தெரிவித்துள்ளது. ஏற்கனவே, நட்பு நாடு என்ற அடிப்படையில் இலங்கை நாட்டிற்கு சுமார் 5 லட்சம் தடுப்பூசிகளை இந்தியா இலவசமாக அனுப்பி வைத்தது. இதுபோக சுமார் ஒரு கோடி தடுப்பூசிகளை சீரம் நிறுவனத்திடம் 35 லட்சம் தடுப்பூசிகளை நேரடியாக ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்திடமும் இலங்கை அரசு ஆர்டர் செய்துள்ளது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

சீனாவின் தடுப்பூசி இன்னும் உலக சுகாதார அமைப்பால் ஒப்புதல் பெறவில்லை என்பதால் அதற்கு அனுமதி அளிக்க அதிக காலம் ஆகும் என்று அந்நாட்டின் அமைச்சர் ரமேஷ் பதிரானா தெரிவித்துள்ளார். இலங்கை தவிர பல்வேறு நாடுகளும் சீனாவின் தடுப்பூசிகளைப் பயன்படுத்த தயக்கம் காட்டியே வருகின்றன. சீன தடுப்பூசிகளின் மூன்றாம் கட்ட தடுப்பூசி சோதனை குறித்த முடிவுகள் வெளிவராததால் பல நாடுகளும் இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளன.

சீன தடுப்பூசிகள்

சீன தடுப்பூசிகள்

சினோபார்ம் மற்றும் சினோவாக் என்று இரண்டு வகையான தடுப்பூசிகளைச் சீனா சோதனை செய்து வருகிறது. அதில் சினோவாக் தடுப்பூசி வெறும் 50.4 சதவீதமும், சினோபார்ம் 79 சதவீதமும் மட்டுமே பலன் அளிப்பதாக ஆரம்பக்கால ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. தடுப்பூசிகளின் தடுப்பாற்றால் மிகக் குறைவாக உள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர்.

English summary
Sri Lanka decides to use the Oxford-AstraZeneca vaccine made in India to inoculate 14 million people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X