கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூத்துக்குடி, காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவைக்கு இலங்கை மீண்டும் முயற்சி

Google Oneindia Tamil News

கொழும்பு: தூத்துக்குடி மற்றும் காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் சேவையை தொடங்குவதில் இலங்கை முனைப்பு காட்டி வருகிறது.

வணிகம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக்காக இலங்கை துறைமுக அதிகாரபை சபை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக இந்திய நகரங்களுக்கு பயணிகள் கப்பல் சேவையை தொடங்க உள்ளதாம்.

Sri Lanka to start passenger ferry service to India?

கொழும்பு - தூத்துக்குடி இடையே மற்றும் காங்கேசன்துறை - காரைக்கால் இடையே என 2 பயணிகள் கப்பல் சேவைக்கு திட்டமிடப்பட்டுள்ளதாம். இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழகத்துக்கு செல்வோருக்கு இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.

கடந்த 2011-ம் ஆண்டு கொழும்பு- தூத்துக்குடி இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. தனியார் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சேவை வெற்றி தரவில்லை. இதனால் நிறுத்தப்பட்டது.

தற்போது இலங்கை அரசு மீண்டும் இந்த முயற்சியை கையில் எடுத்திருக்கிறது. ஏற்கனவே காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்த இந்தியாவிடம் இருந்து இலங்கை கடன்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Srilanka will start passenger ferry service to India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X