கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கை அதிபர் தேர்தல் LIVE: ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி!

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்ற பெற்றுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வி அடைந்துள்ளார்.

52.25 சதவீத வாக்குகளை பெற்று கோத்தபய வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசாவுக்கு 41.99 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்சே 6924255 வாக்குகள் பெற்றார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 5564239 வாக்குகள் பெற்றார். இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே நாளை பதவியேற்க உள்ளார்.

Newest First Oldest First
4:41 PM, 17 Nov

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வி
4:24 PM, 17 Nov

கொழும்பு

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 6924255 வாக்குகள் பெற்றார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 5564239 வாக்குகள் பெற்றார்
4:20 PM, 17 Nov

கொழும்பு

52.25 சதவீத வாக்குகளை பெற்று கோத்தபய வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு. சஜித் பிரேமதாசாவுக்கு 41.99 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாக அறிவிப்பு. இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே நாளை பதவியேற்க உள்ளார்
2:40 PM, 17 Nov

இலங்கை தேர்தல் முடிவு: கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து. அமைதியை நிலைநாட்ட உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்நோக்குகிறேன். இந்தியா- இலங்கை இடையிலான சகோதரத்துவ உறவுகளை ஆழப்படுத்த பணியாற்றுவோம்- மோடி.
12:12 PM, 17 Nov

கொழும்பு

தொண்டர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அமைதியாக கொண்டாட விடும். பிரச்சாரத்தில் இருந்த அமைதி வெற்றிக்கு பின்பும் இருக்க வேண்டும். அமைதியாக தேர்தலை நடத்தியதற்கு நன்றி - கோத்தபய ராஜபக்சே
12:07 PM, 17 Nov

கொழும்பு

தேர்தலில் எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பயணிப்போம்- கோத்தபய ராஜபக்சே பேட்டி
11:23 AM, 17 Nov

கொழும்பு

அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 50% வாக்குகள் பெற்று முன்னிலை. 4,42,185 வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை. கோத்தபய ராஜபக்சே 35,40,023 வாக்குகளும், சஜித் பிரேமதாச 30,97,838 வாக்குகளும் பெற்றுள்ளனர்
10:57 AM, 17 Nov

கொழும்பு

மன்னார் மாவட்டத்தில் சஜித் பிரேமதாச - 53,602 பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே - 6,435 பெற்றுள்ளார்.
10:57 AM, 17 Nov

முல்லைத்தீவு மாவட்டத்தில் சஜித் பிரேமதாச - 47,594 பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே - 4,252 பெற்றுள்ளார்.
10:56 AM, 17 Nov

வவுனியா மாவட்டத்தில் சஜித் பிரேமதாச - 65,141 பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே - 13,715 பெற்றுள்ளார்.
10:33 AM, 17 Nov

கொழும்பு

தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் சஜித் பிரேமதாச அபார முன்னிலை பெற்றுள்ளார். வடக்கு மாகாணத்தில் கோத்தபய ராஜபக்சேவிட சஜித் லட்சக் கணக்கான வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்
9:58 AM, 17 Nov

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், தான் வெற்றி பெற்றதாக கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ளார். யார் வெற்றி என்று தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், தான் வெற்றி பெற்றுள்ளதாக கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ளார்
8:54 AM, 17 Nov

இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே முன்னிலை. சஜித் பிரேமதாசவை விட 37,285 வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை. கோத்தபய ராஜபக்சே 12,39,181 வாக்குகள் பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச 12,01,896 வாக்குகள் பெற்றுள்ளார் .
8:17 AM, 17 Nov

இலங்கை அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலை. கோத்தபய ராஜபக்சேவைவிட சஜித் பிரேமதாச, சுமார் ஒரு லட்சம் வாக்குகள் முன்னிலை
8:26 PM, 16 Nov

கொழும்பு

இலங்கை தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை மாலை 6 மணிக்குள் அறிவிக்கப்படும்- தேர்தல் ஆணைக்குழு தலைவர் தேசப்பிரிய
7:33 PM, 16 Nov

கொழும்பு

தபால் வாக்குகளை எண்ணும் பணி முடிவடைந்து நள்ளிரவுக்கு முன்பாக அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும்- தேர்தல்கள் ஆணைக் குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய
6:18 PM, 16 Nov

கொழும்பு

இன்றைய வாக்குப் பதிவு விவரம்: தமிழர் பிரதேசங்கள்: யாழ்ப்பாணம் - 66.5% வவுனியா - 75.12% முல்லைத்தீவு - 76.2% கிளிநொச்சி - 73% மன்னார் - 71.7% மட்டக்களப்பு - 75% அம்பாறை - 80% திருகோணமலை - 83% . கொழும்பு - 75% ஹம்பாந்தோட்டை - 81% பதுளை - 80% மொனராகலை - 80% ரத்தினபுரி - 84% களுத்துறை - 80% மாத்தறை -79% காலி -80% மாத்தளை - 79% கண்டி - 80% பொலனறுவை -79%புத்தளம் -75% அநுராதபுரம் -75% நுவரெலியா - 80% கேகாலை-80% கம்பஹா-81% குருநாகல் - 82%
5:54 PM, 16 Nov

கொழும்பு

நாட்டு மக்களுக்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனா சிறப்பு உரை
5:23 PM, 16 Nov

கொழும்பு

தபால் மூலம் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது- சில இடங்களில் சற்று தாமதமாகவும் தொடங்கும்
5:23 PM, 16 Nov

கொழும்பு

இலங்கை முழுவதும் சுமார் 80% வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என்கின்றன தகவல்கள்
5:20 PM, 16 Nov

கொழும்பு

வாக்குப் பதிவு முழுமையான விவரங்கள் இரவு 7 மணிக்கு வெளியிடப்படும்.
5:08 PM, 16 Nov

கொழும்பு

வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடங்கின
5:02 PM, 16 Nov

கொழும்பு

அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை பணி சற்று நேரத்தில் தொடங்குகிறது
5:02 PM, 16 Nov

கொழும்பு

இலங்கை 8-வது அதிபர் தேர்தலுக்காக வாக்குப் பதிவுகள் முடிவடைந்தன
5:00 PM, 16 Nov

இலங்கை 8-வது அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்தது
4:32 PM, 16 Nov

கொழும்பு

மாலை 4 மணிவரையிலான வாக்குப் பதிவு நிலவரம்: ஹம்பந்தோட்டா- 75% வவுனியா - 72% பதுளை - 75% அம்பாறை- 70% மொனரகல- 80% முல்லைத்தீவு- 72.5% கிளிநொச்சி- 68% மன்னார்- 65.2 % மட்டக்களப்பு- 65 % திருகோணமலை - 70 %
4:27 PM, 16 Nov

கொழும்பு

வாக்குப் பதிவு முடிவடைய இன்னும் 30 நிமிடங்களே இருப்பதால் அனைவரும் விரைவாக வாக்களிக்க வேண்டும் என தேர்தல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
4:17 PM, 16 Nov

பதுளை

பதுளையில் தேர்தல் கண்காணிப்பாளருக்கு உதவும் பணியில் இருந்த மூத்த தமிழ் பத்திரிகையாளர் கந்தையா வேலாயுதம் ( வயது 62) மாரடைப்பால் காலமானார்.
4:16 PM, 16 Nov

யாழ்ப்பாணம்

வடக்கில் தமிழர் வாழும் பகுதிகளில் ராணுவ சோதனைச் சாவடிகள் இருப்பதாக வெளியான தகவல்கள் வதந்திகளே- ராணுவ தளபதி
4:16 PM, 16 Nov

கேகாலை

கேகாலை தெரணியாகலவில் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களித்ததால் இந்திய வம்சாவளித் தமிழர்கள் மீது தாக்குதல்
READ MORE

Srilankan Presidential Election Live updates
English summary
Here are the Srilankan Presidential Elections 2019 Live Updates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X