கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை வன்முறை:மகிந்த ராஜபக்சே கூட்டாளி எம்.பி.க்கள்,போலீஸ் அதிகாரி உட்பட 22 பேரை கைது செய்ய உத்தரவு

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் கூட்டாளி எம்.பிக்கள் 4 பேர் மற்றும் போலீஸ் உயரதிகாரி தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 22 பேரை கைது செய்ய அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சேக்கு எதிரான போராட்டம் தொடருகிறது. அண்மையில் கொழும்பு காலிமுகத் திடலில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னதாக மிகப் பெரும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஆனால் போராட்டகாரர்கள் ராஜபக்சேக்கள் ஏவிவிட்ட குண்டர்களை உதைத்து அனுப்பினர். பின்னர் பிரதமர் மாளிகையான அலரி மாளிகையும் விடிய விடிய முற்றுகையிடப்பட்டது.

Srilanka AG directs CID to arrest 22 Rajapaksa supporters including 4 MPs

இதனையடுத்தே மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் நள்ளிரவில் அங்கிருந்து தப்பி ஹெலிகாப்டர் மூலம் திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படையிடம் தஞ்சம் அடைந்தார். இந்த சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை சுமார் 400க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 4 எம்.பிக்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட 22 பேரை கைது செய்ய அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட உள்ள ராஜபக்சே கூட்டாளிகள் விவரம்:

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
சனத் நிஷாந்த
சஞ்சீவ எதிரிமான்ன
மிலான் ஜயதிலக்க
தேசபந்து தென்னகோன்
துசித ரணபாகு
டான் பிரியசாத்
மஹிந்த கஹந்தகம
நாலக விஜேசிங்க
சுபாஷ்
அமல் சில்வா
சமீர சதுரங்க ஆரியரத்ன
ருவன்வெல்லே ரமணி
சஜித் சாரங்கபந்துல ஜெயமான்ன
தினேத் கீதக
அராபி வசந்த
புஷ்பலால் குமாரசிங்க
நிஷாந்த மெண்டிஸ்
புஷ்பகுமார
சவின் பெர்னாண்டோ
சமன்லால் பெர்னாண்டோ

English summary
Srilanka AG Had directed CID to arrest 22 Rajapaksa supporters including 4 MPs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X