கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இந்தியா பயணம்.. இலங்கை ராணுவ தளபதி பகீர் தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கையில் நடந்த சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்று உள்ளது.

    கொழும்பு: இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்திய தீவிரவாதிகள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர் என இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனாயக் பகீர் தகவலை அளித்துள்ளார்.

    இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது தற்கொலை படையினர் 8 இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் 359 பேர் பலியாகிவிட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மேலும் 160 தீவிரவாதிகள் இலங்கையில் ஊடுருவியதாக இலங்கை உளவு துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

    சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை வீடியோ கேம் என விமர்சனம்.. ராணுவத்தை அவமதித்த மோடி.. ராகுல் சுளீர் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை வீடியோ கேம் என விமர்சனம்.. ராணுவத்தை அவமதித்த மோடி.. ராகுல் சுளீர்

    பேட்டி

    பேட்டி

    இதையடுத்து தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனாயக் பிபிசிக்கு பேட்டி அளித்திருந்தார்.

    இந்தியா

    இந்தியா

    அதில் அவர் கூறுகையில் எங்களுக்கு கிடைத்த தற்போதைய தகவலின்படி தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் இந்தியாவின் காஷ்மீர், கேரளம், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு பயணம் செய்துள்ளனர். அவர்கள் எதற்காக இந்தியா சென்றார்கள் என தெரியவில்லை.

    தகவல்

    தகவல்

    எனினும் அவர்கள் ஏதாவது பயிற்சியில் ஈடுபட்டனரா அல்லது மற்ற அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள இந்தியா சென்றிருக்கின்றனரா என தெரியவில்லை என தெரிவித்தார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கூறுகையில் பயங்கரவாதிகள் குறித்து இலங்கை எந்த தகவலையும் இதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை.

    திட்டம்

    திட்டம்

    நாங்கள் விசாரணையை தொடர்ந்து வருகிறோம் என தெரிவித்துள்ளது. புல்வாமா போன்ற ஒரு தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக இந்திய உளவுத் துறை ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Sri Lanka Army chief Lieutenant General Mahesh Senanayake said Some of the suicide bombers who carried out a series of blasts in Sri Lanka on Easter Sunday had travelled to India to possibly train in terrorism activities.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X