கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் எரிபொருள் விநியோகம் பாதிப்பு... எப்போது சீராகும்?

Google Oneindia Tamil News

Recommended Video

    கைதான இலங்கை அமைச்சர் அர்ஜுன ரணதுங்காவுக்கு நீதிமன்றம் ஜாமீன்

    கொழும்பு : இலங்கை அரசியல் பரபரப்புகளின் இடையே முன்னாள் அமைச்சர் அர்ஜுனா ரணதுங்காவின் பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு புதிய பிரதமராக ராஜபக்சே அறிவிக்கப்பட்டது முதல் பரபரப்புக்கு மேல் பரபரப்புகள் அரங்கேறி வருகின்றன. ரணில் விக்ரமசிங்கேவுடன் சேர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களில் ஒருவரான முன்னாள் பெட்ரோலியத்துறை அமைச்சர் அர்ஜுனா ரணதுங்கா கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள சிலோன் பெட்ரோலிய கழகத்திற்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நுழைய முயன்றார். அப்போது அதிபர் சிறிசேனாவின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் ஒன்றுகூடி அர்ஜுனா ரணதுங்கா அலுவலகத்திற்குள் செல்ல முட்டுக்கட்டை போட்டனர்.

    Srilanka crisis shooting incident hits fuel supply

    இதில் ஏற்பட்ட கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் அர்ஜுனா ரணதுங்காவின் பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். அர்ஜுனாவை சுற்றியிருந்த கூட்டத்தினர் எதிர்பாராத சூழலில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததோடு 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு காரணமான அர்ஜுனா ரணதுங்கா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளிவந்துள்ளார்.

    சிலோன் பெட்ரோலியக் கழகத்தில் ஏற்பட்ட இந்த பரபரப்பு சம்பவத்தால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சிலோன் பெட்ரோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் புதன்கிழமை மாலை தான் இந்த தட்டுப்பாடு சரியாகும் என்று தெரிவித்துள்ளது. பவுசர் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஷாந்த சில்வா இது குறித்து கூறுகையில் " துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தொழிலாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் இறங்கியதால் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னரே எரிபொருள் தேவை குறித்து கணக்கெடுப்பு செய்து விநியோகம் செய்யப்படும், வேலைநிறுத்தத்தால் அது பாதிக்கப்பட்டதையடுத்து விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. எனினும் ரணதுங்கா கைதையடுத்து தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

    10 பேருடன் சரமாரி தொடர்புகள்.. இடையே வெளியூர் டூர் வேறு.. அதிர வைக்கும் நிர்மலா தேவி வாக்குமூலம் 10 பேருடன் சரமாரி தொடர்புகள்.. இடையே வெளியூர் டூர் வேறு.. அதிர வைக்கும் நிர்மலா தேவி வாக்குமூலம்

    திங்கட்கிழமை மாலை 6 மணி முதலே விநியோகத்தை தொடங்கி இருக்கிறோம். எனினும், முழு விநியோகமானது புதன்கிழமையே சரியாகும்" என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Sri Lanka crisis: Shooting incident hits fuel supply;Ceylon Petroleum private Bowsers owner's association said that fuel supply to be restored by tomorrow
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X