இலங்கை அதிபர் தேர்தல்: நாளை கோத்தபாய ராஜபக்சே வேட்புமனுத் தாக்கல்
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே நாளை காலை வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சே அறிவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை குடியுரிமைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதால் அவர் தேர்தலில் போட்டியிட முடியுமா? என்கிற கேள்வி எழுந்தது. இதனால் மற்றொரு சகோதரரான சமல் ராஜபக்சேவும் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் கோத்தபாயவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தேர்தலில் போட்டியிட தடை இல்லாத நிலை உருவானது. இன்று பவுத்த பிக்குகள் ஆசி வழங்க வேட்புமனுவில் கையெழுத்திட்டார் கோத்தபாய ராஜபக்சே.
கோத்தபாய ராஜபக்சே நாளை காலை வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!