கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடல்... எரிப்பதற்கு பதில் இனி அடக்கம்... இலங்கை அரசு..!

Google Oneindia Tamil News

கொழும்பு: கொரோனாவால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் உடல் இலங்கையில் எரிக்கப்பட்டு வந்த நிலையில் இனி நல்லடக்கம் செய்வதற்கு அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்கள் உடல்களை எரிப்பதற்குப் பதிலாக நல்லடக்கம் செய்யும் விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் வரை குளிரூட்டிகளில் உடல்களை வைத்து பாதுகாக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

Srilanka govt Consideration to bury the bodies of Islamists killed by Corona

ராஜபக்சே தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்த தீர்மானப்படி கொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்கள் உடல்களை எரிப்பதற்குப் பதிலாக அடக்கம் செய்வதற்குரிய சாத்தியக்கூறுகளை சுகாதாரத்துறை அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது.

கணவர் இறந்த துக்கம்.. டாக்டருக்கு படிக்கும் மகளுடன்.. மனைவி எடுத்த விபரீத முடிவு!கணவர் இறந்த துக்கம்.. டாக்டருக்கு படிக்கும் மகளுடன்.. மனைவி எடுத்த விபரீத முடிவு!

மேலும், குளிரூட்டிகளை போதிய அளவில் இருப்பு வைத்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சுகாதாரத்துறை அமைச்சர் சுதர்சன பெர்னாண்டோ, இது தொடர்பாக மருத்துவ நிபுணர்களை சந்தித்து அடக்கம் செய்வதனால் பாதிப்பு ஏற்படுமா? என்பது பற்றி கருத்து கேட்டறிந்து வருகிறார்.

இது தொடர்பாக அவர் தயாரித்த அறிக்கையை இலங்கை அதிபரிடம் அவர் அளிப்பார் எனத் தெரிகிறது.

English summary
Srilanka govt Consideration to bury the bodies of Islamists killed by Corona
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X