கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கையை உலுக்கிய மனித வெடிகுண்டு வெடிப்புகள்.. 7 தீவிரவாதிகளின் பெயர்கள் வெளியானது!

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கை மனித வெடிகுண்டு வெடிப்புகள்.. 7 தீவிரவாதிகளின் பெயர்கள் வெளியானது!- வீடியோ

    கொழும்பு: இலங்கையில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் பெயர்களை அந்நாட்டு புலனாய்வு பிரிவு இன்று வெளியிட்டது.

    இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது ஹோட்டல்கள் மற்றும் தேவாயலங்கள் உள்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 350-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

    500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலையில் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    நாசவேலை பற்றி கோவையில் கிடைத்த தகவல்... இந்தியா எச்சரித்தும் கோட்டை விட்ட இலங்கைநாசவேலை பற்றி கோவையில் கிடைத்த தகவல்... இந்தியா எச்சரித்தும் கோட்டை விட்ட இலங்கை

    வெடிகுண்டு

    வெடிகுண்டு

    எனினும் பாதுகாப்பு துறை அமைச்சர் விஜேவர்தனே, இந்த தாக்குதலுக்கு இரு இஸ்லாமிய அமைப்புகளே காரணம். ஒன்று தேசிய தவ்ஹீத் ஜமா அத் மற்றும் ஜம்மியாதுல் மில்லாது இப்ராஹிம் ஆகிய அமைப்புகளே குண்டுவெடிப்புக்கு பொறுப்பாகும் என்று தெரிவித்திருந்தார்.

    புலனாய்வு துறை

    புலனாய்வு துறை

    மேலும் தற்கொலை படை தாக்குதலில் ஒரு பெண் உள்பட 9 பேர் இருந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் இந்த நாசக்கார வேலைக்கு யார் காரணம் என்பது குறித்து அந்நாட்டு புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வந்தது.

    7 பெயர்கள்

    7 பெயர்கள்

    இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட 7 தீவிரவாதிகளின் பெயர்களை புலனாய்வு துறை இன்று வெளியிட்டது. அதில் அபு உபெய்தா, அபு அல் முக்தார், அபு கலீல் , அபு ஹம்ஸா, அபு முஹம்மத், அபு அல் பாரா, அபு அப்துல்லா ஆகியோர் தாக்குதல் நடத்தியவர்களாவர்.

    விசாரணை

    விசாரணை

    பொதுவாக ஐ.எஸ் அமைப்பில் இணைந்ததால் தீவிரவாதிகளின் பெயருக்கு முன் அபு என சேர்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    English summary
    Srilanka Intelligence Agency releases the names of ISIS terrorist names who involved in Easter bomb blasts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X