கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கையில் காலை முதல் தொடரும் குண்டுவெடிப்புகள்… தெஹிவாலாவில் சந்தேக நபர் கைது… விசாரணை தீவிரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள், இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

    கொழும்பு:இலங்கையில் நீடிக்கும் தொடர் குண்டுவெடிப்புகளால் மக்கள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ள நிலையில்.. இந்த சம்பவங்கள் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இலங்கையில் நட்சத்திர ஓட்டல்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. ஈஸ்டர் பண்டிகையையொட்டி கொழும்பு கொச்சிடை அந்தோணியார், கட்டான கட்டுவப்பட்டி தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையின் போது குண்டு வெடித்தது.

    குண்டு வெடிப்பு சம்பவத்தில் 160 பேர் உயிரிழந்துள்ளனர். 450க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உள்ளனர். குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடங்களில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

     8வது குண்டுவெடிப்பால் உறைந்து போன இலங்கை... சமூக வலைதளங்கள் முடக்கம்! 8வது குண்டுவெடிப்பால் உறைந்து போன இலங்கை... சமூக வலைதளங்கள் முடக்கம்!

    தொலைபேசி எண்கள் அறிவிப்பு

    தொலைபேசி எண்கள் அறிவிப்பு

    இலங்கை சென்றுள்ள இந்தியர்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளார்களா என்பது குறித்து தகவல்களை அவர்களது உறவினர்கள் அறிந்து கொள்ள, "+94777903082 +94112422788 +94112422789 என்ற தொலைபேசி எண்களை அழைக்கலாம்" என்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    2 இடங்களில் குண்டுவெடிப்பு

    2 இடங்களில் குண்டுவெடிப்பு

    மதியத்துக்கு பிறகு... மேலும் 2 இடங்களில் குண்டுகள் வெடிக்க ஒட்டுமொத்த இலங்கையுமே உறைந்து போனது. தெஹிவாலா பகுதியில் உள்ள மிருக காட்சி சாலை அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் பலியான நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    ஒருவர் கைது, விசாரணை

    ஒருவர் கைது, விசாரணை

    கைது செய்யப்பட்டவரிடம் இலங்கை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் யார், என்ன என்பது பற்றிய தகவல்களை அவர்கள் வெளியிடவில்லை.

    வீடு, வீடாக சோதனை

    வீடு, வீடாக சோதனை

    அதே நேரத்தில், தெமட்டோகோடா பகுதியில் பாதுகாப்பு படையினர் வீடு, வீடாக தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். அந்த பகுதியில் மேலும் குண்டுவெடிப்போ அல்லது அசம்பாவிதங்களோ நிகழலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனையை அவர்கள் மேற்கொண்டு உள்ளனர்.

    English summary
    Srilanka Police have arrested one suspect in Dehiwala.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X