கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்று புலிகளை தேடிய இலங்கை போலீஸ்.... இன்று ஹெராயின் கடத்தலில் பிடிபட்டு தப்பிய பூனையை தேடுதாம்

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் ஹெராயின் கடத்தி சிக்கிய பூனை விவகாரம் தலைப்புச் செய்தியாகி உள்ளது.

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு செல்போன், போதைப் பொருட்கள் பல்வேறு நூதன முறைகளில் விநியோகிக்கப்பட்டு வந்தது. சிறைச் சாலை மதில் சுவர்களில் இருந்து வீசப்படும் இத்தகைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகின்றன.

Srilanka Police search Cat in heroin smuggling into prison

இது தொடர்பான விசாரணைகளில் போலீசாருக்கு ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் கடத்த பூனைகள் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது.

இதனால் ஒருகாலத்தில் விடுதலைப் புலிகளை தேடிய இலங்கை போலீசார், போதைப் பொருட்களை கடத்தும் பூனைகளை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனிடையே சிறைச்சாலை அருகே 2 நாட்களுக்கு முன்னர் ஒரு பூனை சிக்கியது.

 இலங்கை தாதா அங்கொடவுக்கு விஷம் கொடுத்து எரித்த காதலி உட்பட 3 பேர் கோவையில் கைது- சிக்கியது எப்படி? இலங்கை தாதா அங்கொடவுக்கு விஷம் கொடுத்து எரித்த காதலி உட்பட 3 பேர் கோவையில் கைது- சிக்கியது எப்படி?

அந்த பூனையின் கழுத்தில் சங்கேத குறியீடுகளுடன் ஹெராயின் போதைப் பொருள் பொட்டலம் கட்டப்பட்டிருந்தது. இந்த பூனையை லாவகமாக பிடித்து சென்ற போலீசார் அதை தங்களது கட்டுப்பாட்டில் -அதாவது சிறை கஸ்டடியில் வைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது அந்த பூனை தப்பி ஓடிவிட்டதாகவும் அதை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

எப்படி இருந்த நான்?

English summary
Srilanka Police is searching a Cat which was used in heroin smuggling into prison.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X