கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிபர் தேர்தல்: தாமரை மொட்டு சின்னமா? பாஜகவை நினைத்து அலறும் இலங்கை கட்சிகள்- கைக்கு அமோக ஆதரவு!

Google Oneindia Tamil News

Recommended Video

    Srilanka Political Parties are fearing over the Lotus bud symbol

    கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தாமரை மொட்டு சின்னம், கை சின்னம் குறித்து விவாதங்கள் களைகட்டியுள்ளன. தாமரை மொட்டு சின்னத்தை முன்வைத்தால் இஸ்லாமியர்கள் வாக்கு கிடைக்காமல் போகும் என பதறுகின்றன இலங்கை அரசியல் கட்சிகள்.

    இலங்கையில் விரைவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள் அதிபர் ராஜ்பக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுகிறார். பொதுஜன பெரமுனவும் அதிபர் மைத்திரிபாலவின் சிறிலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து தேர்தலை சந்திக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

    அண்ணனுக்கு என்னாச்சு? நல்லா இருக்கிறாரா.. மு.க.அழகிரி ஆதரவாளர்களிடையே திடீர் பதற்றம்!அண்ணனுக்கு என்னாச்சு? நல்லா இருக்கிறாரா.. மு.க.அழகிரி ஆதரவாளர்களிடையே திடீர் பதற்றம்!

    கோத்தபாயவுக்கு தாமரை மொட்டு

    கோத்தபாயவுக்கு தாமரை மொட்டு

    இப்பேச்சுவார்த்தைகளில் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது தேர்தல் சின்னம்தான். பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்திலேயே போட்டியிடலாம் என்கிறது ஒரு தரப்பு. ஆனால் மற்றொரு தரப்போ, தாமரை மொட்டு சின்னம் என்றாலே இந்தியாவில் இந்துத்துவா அமைப்பான பாஜகவின் சின்னம்தான் நினைவுக்கு வருகிறது; அந்த சின்னத்துக்கு இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாக்களிப்பது இல்லை. அதனால் இலங்கையிலும் இஸ்லாமியர்கள் வாக்குகள் கிடைக்காமல் போய்விடும் என்கிறது மற்றொரு தரப்பு.

    தாமரை மொட்டுக்கு எதிர்ப்பு

    தாமரை மொட்டுக்கு எதிர்ப்பு

    ஆகையால் பொதுவான சின்னம் ஒன்றில் போட்டியிட்டால் இஸ்லாமியர்கள் வாக்குகளும் கிடைக்கும் எனவும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. ஹெற்றிபொல என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர இதை பகிரங்கமாகவே கூறியுள்ளார். அக்கூட்டத்தில் பேசிய தயாசிறி ஜயசேகர, மொட்டு சின்னத்தை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம் என்று சிங்களர் கூறுகின்றனர். அதனைப் பார்க்கும் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கட்சி தான் நினைவுக்கு வருகிறது.

    தயாசிறி பகிரங்க பேச்சு

    தயாசிறி பகிரங்க பேச்சு

    இந்தியாவில் முஸ்லிம் மக்களின் வாக்குள் 14%. ஆனால் முஸ்லிம் மக்கள் யாரும் மோடிக்கு ஆதரவளிக்கவில்லை. சாதாரண முஸ்லிம் மக்கள், மொட்டு சின்னத்தை மோடியின் சின்னமாகவும், அவர் இந்துத்துவாவாதி என்பதாலும் தவிர்க்கிறார்கள் என்பது சிங்களர் கருத்து என கூறியுள்ளார். ஆனால் பொதுஜன பெரமுனவினர் தாமரை மொட்டு சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்கின்றனர் என பேசியுள்ளார்.

    தமிழர்கள் சாய்ஸ் கை சின்னம்

    தமிழர்கள் சாய்ஸ் கை சின்னம்

    அதேநேரத்தில் வடகிழக்கில் உள்ள தமிழர்கள் கை சின்னத்தை விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இந்திய அரசியலில் நீண்டகாலம் காங்கிரஸின் கை சின்னம் ஆட்சியில் இருந்தது. அது ஈழத் தமிழர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் கை சின்னத்தைக் கூட தேர்வு செய்யலாம்; தாமரை மொட்டு மட்டும் வேண்டாம் என்கிறது சிறிலங்கா சுதந்திர கட்சி.

    தாமரை மொட்டுக்கு எப்படியெல்லாம் சிக்கல்!

    English summary
    Srilanka Political Parties are fearing over the Lotus bud symbol for the upcoming Presidential elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X