கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாழ். உள்ளிட்ட ஈழத் தமிழர் பகுதிகளில் அமைதியான வாக்குப் பதிவு!

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கை 8-வது அதிபர் தேர்தல்- பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு தொடங்கியது

    யாழ்ப்பாணம்: இலங்கை அதிபர் தேர்தலில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஈழத் தமிழர் பகுதிகளில் அமைதியாகவும் வேகமான வாக்குப் பதிவும் நடைபெற்றது. தமிழர் பகுதிகளில் 65% முதல் 75% வரை வாக்குகள் பதிவாகி உள்ளன.

    Srilanka Presidential Elections: 50 % average voter turnout as at 12 noon

    இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. சிங்களர் வாழும் தென்னிலங்கை, இந்திய வம்சாவளித் தமிழர்களின் மலையகம் மற்றும் ஈழத் தமிழர்களின் வடகிழக்கு பகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

    Srilanka Presidential Elections: 50 % average voter turnout as at 12 noon

    யாழ்ப்பாண மாவட்டத்தில் மழைக்கு நடுவே சுமூகமான வாக்குப் பதிவு நடைபெற்றது. மல்லாகம், தெல்லிப்பளை, கீரிமலை, காங்கேசன்துறை, ஊரணி, பலாலி, வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளில் அசம்பாவிதங்கள் இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் ஒன்றிரண்டு புகார்கள் பதிவாகி இருக்கின்றன.

    Srilanka Presidential Elections: 50 % average voter turnout as at 12 noon

    முல்லைத்தீவு மாவட்டத்திலும் எவ்வித வன்முறையும் இல்லாமல் அமைதியான வாக்குப் பதிவு நடைபெற்றது. இதேபோல் கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது.

    ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர்களின் வடகிழக்கு பகுதிகளில் சுமார் 65% முதல் 75% வாக்குகள் பதிவாகி இருந்தன.

    English summary
    According to the People’s Actions for Free and Fair Election, the average voter turnout of the Srilanka's presidential election was recorded as over 50 per cent as at 12.00 noon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X