கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்ணன் போய் தம்பி வந்தார்.. ராஜபக்சே குடும்பத்தின் கையில் மீண்டும் அதிகாரம்.. யார் இந்த கோத்தபய?

இலங்கை அதிபராக பதவி ஏற்க உள்ள கோத்தபய ராஜபக்சே போர் குற்ற புகாரில் சிக்கியவர், பல சர்ச்சைகளில் சிக்கியவர், ஊழல் புகாரில் மாட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Sri Lanka election 2019 | இலங்கை தேர்தலில் மாறுபட்ட வாக்குச் சீட்டு வாக்களிப்பது எப்படி ?

    கொழும்பு: இலங்கை அதிபராக பதவி ஏற்க உள்ள கோத்தபய ராஜபக்சே அந்நாட்டு ராணுவத்தை கட்டமைத்தவர், பொருளாதாரத்தை மாற்றியவர் என்று சிறப்புக்கு உரியவர். அதேபோல் இவர் போர் குற்ற புகாரில் சிக்கியவர், பல சர்ச்சைகளில் சிக்கியவர், ஊழல் புகாரில் மாட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்க இருக்கிறார். இன்று மாலைதான் அதிகாரபூர்வமாக தேர்தல் முடிவுகள் வெளியாகும். ஆனால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நந்தசேனா கோத்தபய ராஜபக்சே தான் வெற்றிபெற்றுவிட்டதாக அறிவித்துவிட்டார்.

    அதேபோல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டார். இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு மட்டுமே மிச்சம் உள்ளது.

    இறுதிப்போர் நடந்த முல்லைத் தீவில் கோத்தபய பெரும் பின்னடைவு.. சஜித்திற்கு அசரவைக்கும் ஆதரவு!இறுதிப்போர் நடந்த முல்லைத் தீவில் கோத்தபய பெரும் பின்னடைவு.. சஜித்திற்கு அசரவைக்கும் ஆதரவு!

    மிகவும் கண்டிப்பு

    மிகவும் கண்டிப்பு

    இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் இளைய சகோதரருமான கோத்தபய ராஜபக்சே, மிகவும் கண்டிப்பானவர். இலங்கையில் தமிழ் விடுதலை புலிகளுக்கு எதிரான போரை முன்னின்று நடத்தியது இவர்தான். அதேபோல் அங்கு போர் குற்றங்களை செய்ததாக குற்றஞ்சாட்டப்பவரும் கோத்தபய ராஜபக்சேதான்.

    ஐநா எப்படி

    ஐநா எப்படி

    இலங்கை போரின் போது ஐநாவிற்கு எதிராக செயல்பட்டது, ஊடகங்களை முடக்கியது, பெண்களை துன்புறுத்தியது என்று இவருக்கு எதிராக உலக அளவில் நிறைய புகார் எதிரொலித்தது. அமெரிக்க பாஸ்போர்ட்டுடன் வலம் வந்த கோத்தபய ராஜபக்சே, தேர்தலில் நிற்பதற்கு சில நாட்களுக்கு முன்தான் அதை துறந்தார்.

    பேசுவது இல்லை

    பேசுவது இல்லை

    தேர்தலில் நிற்க வேண்டும் என்று அவர் தனது அமெரிக்க பாஸ்போர்ட்டை துறந்தார். இவருக்கு எதிராக நிறைய புகார்கள் சர்ச்சைகள் இருக்கிறது. அதே சமயம் இவர் பேசுவதை விட அதிகமாக செயலில் ஈடுபடுவார் என்று ஒரு பெயர் இருக்கிறது. அதேபோல் இலங்கை பொருளாதார ரீதியாக வளர இவரும் ஒரு காரணம் என்று அந்நாட்டு பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

    மதம் எப்படி

    மதம் எப்படி

    புத்த மதத்தை சேர்ந்த மக்களுக்கு இவர் ஆதரவாக செயல்படுகிறார் என்று புகார் இருக்கிறது. அதேபோல் தேர்தல் பிரச்சாரத்தின் போது கோத்தபய ராஜபக்சே தேசியவாதம், ஒரே நாடு, சிங்கள ஆதரவு, புத்த மத ஆதரவு என்று மெஜாரிட்டி மக்களை கருத்தில் கொண்டு மட்டுமே பிரச்சாரம் செய்தார்.

    மக்கள் ஆதரவு

    மக்கள் ஆதரவு

    தேர்தல் முடிவுகளின் மூலம் தற்போது அவருக்கான மக்கள் ஆதரவும் வெளிவந்துள்ளது. தன்னுடைய குடும்பத்தை அரசியலுக்குள் கொண்டு வர மாட்டேன் என்று கோத்தபய ராஜபக்சே பிரச்சாரத்தில் தெரிவித்தார். ஆனால் கண்டிப்பாக இவர் அண்ணன் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக விரைவில் நியமிப்பார் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

    சீனா நெருக்கம்

    சீனா நெருக்கம்

    சீனாவிற்கு மிகவும் நெருக்கமான கோத்தபய ராஜபக்சே பல முறை சீனாவிற்கு விசிட் அடித்துள்ளார். அதேபோல் அமெரிக்காவிற்கும் இவர் நெருக்கமான நபர் (அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்). ஆனால் இந்தியாவுடன் அவ்வளவு நெருக்கம் இல்லை.

    தமிழர்களுக்கு எப்படி

    தமிழர்களுக்கு எப்படி

    அதே சமயம் இவர் தமிழர்களுக்கு எதிரானவர் என்ற புகார் இருக்கிறது. இவர் ஆட்சிக்கு வந்த பின் தமிழர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பார். அல்லது அவர்களை அரவணைத்து செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழர்களுடன் நெருக்கமாக இருப்பேன் என்று இவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    அச்சம்

    அச்சம்

    இலங்கையில் இருக்கும் முன்னணி ஊடகத்தினர், என்ஜிஓக்களை சேர்ந்தவர்கள், முன்னாள் ஐநா பணியாளர்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கோத்தபய ராஜபக்சேவின் வெற்றியை பார்த்து ஷாக்கிங் ரியாக்சன் கொடுத்துள்ளனர். இவருக்கு எதிராக ஊழல் புகார்களும் இருக்கிறது. இவரின் வெற்றி இலங்கை அரசியலை மொத்தமாக புரட்டிப்போடும் என்கிறார்கள்.

    English summary
    Srilanka Presidential Elections: All you need to know about the new president Gotabaya Rajapaksa.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X