கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இறுதிப்போர் நடந்த முல்லைத் தீவில் கோத்தபய பெரும் பின்னடைவு.. சஜித்திற்கு அசரவைக்கும் ஆதரவு!

இலங்கையில் உள்நாட்டு போரில் இறுதிப்போர் நடந்த முல்லைத் தீவில் கோத்தபய ராஜபக்சே பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் உள்நாட்டு போரில் இறுதிப்போர் நடந்த முல்லைத் தீவில் கோத்தபய ராஜபக்சே பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே 50% வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 4,42,185 வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை பெற்றுள்ளார். இதனால் கோத்தபய ராஜபக்சே அதிபர் ஆக வெற்றிபெறுவது உறுதியாகி உள்ளது.

கோத்தபய ராஜபக்சே 35,40,023 வாக்குகளும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 30,97,838 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

ஆதாராளர்களுக்கு ரொம்ப நன்றி.. அமைதியாக கொண்டாடுங்கள்.. கோத்தபய ராஜபக்சே செம ஹாப்பி!ஆதாராளர்களுக்கு ரொம்ப நன்றி.. அமைதியாக கொண்டாடுங்கள்.. கோத்தபய ராஜபக்சே செம ஹாப்பி!

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இலங்கையில் உள்நாட்டு போரில் இறுதிப்போர் நடந்த முல்லைத் தீவில் கோத்தபய ராஜபக்சே பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். வன்னி - முல்லைத் தீவு பகுதியில் சஜித் பிரேமதாச - 47,594 (86.19%) வாக்குகளை பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே- 4,252 (7.70%) வாக்குகளை பெற்றுள்ளார்.

கிளிநொச்சி எப்படி

கிளிநொச்சி எப்படி

கிளிநொச்சி மாவட்டத்தில் சஜித் பிரேமதாச - 55,585 வாக்குகளை பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே - 3,238 வாக்குகளை பெற்றுள்ளார். இது கோத்தபய ராஜபக்சே தரப்பை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

முல்லைத் தீவு எங்கு

முல்லைத் தீவு எங்கு

முல்லைத் தீவு பகுதியில்தான் இலங்கையில் இறுதிப்போர் நடந்தது. அங்கு போர் அத்துமீறல்கள், குற்றங்கள் அதிகம் நடந்தது. பல தமிழர்கள் இதனால் உறவுகளை, உடமைகளை, வீடுகளை இழந்தனர். பல லட்சம் மக்கள் அகதிகளாக வேறு நாடுகளுக்கு குடியேறினார்கள்.

போர் நடந்தது

போர் நடந்தது

தற்போது அதே முல்லை தீவில் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே மிக மோசமாக வாக்குகளை பெற்றுள்ளார். இலங்கையின் தென் பகுதியில் மக்கள் ஆதரவை பெற்றாலும் கூட, வடக்கு மாகாணங்களில் யாரும் எதிர்பாக்காத அளவுக்கு பின்னடைவை சந்தித்துள்ளார்.

தமிழர்கள் ஆதரவு

தமிழர்கள் ஆதரவு

அவர் வடக்கு மாகாணத்தில் எந்த மாவட்டத்திலும் 10%க்கும் அதிகமாக வாக்குகளை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சஜித் பிரேமதாச பல வடக்கு மாவட்டங்களில் 80-90% வாக்குகளை பெற்று இருக்கிறார். மொத்தத்தில் தமிழர்கள் இன்னும் கோத்தபய ராஜபக்சேவை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Srilanka Presidential Elections: Gotabaya Rajapaksa gets very less support in War affected areas in north.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X