கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.. கோத்தபய ராஜபக்சேவிற்கு வாழ்த்துகள்.. சஜித் பரபர பேட்டி!

இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன், அதிபராக வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவிற்கு வாழ்த்துகள் என்று சஜித் பிரேமதாச பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன், அதிபராக வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவை பாராட்டுகிறேன் என்று ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச பேட்டி அளித்துள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலுக்கான முன்னணி நிலவரங்கள் தற்போது வெளிவர தொடங்கி உள்ளது. முழுமையான முடிவுகள் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக் காலம் முடிந்ததால் அங்கு தேர்தல் நடந்துள்ளது. இதனால் இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு பதிவு முடிந்து நேற்று இரவில் இருந்து வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இலங்கை தேர்தல்.. சஜித் பிரேமதாசவிற்கு தமிழர்கள் மாஸ் ஆதரவு.. வடக்கு மாகாணத்தில் கோத்தபய பின்னடைவு!இலங்கை தேர்தல்.. சஜித் பிரேமதாசவிற்கு தமிழர்கள் மாஸ் ஆதரவு.. வடக்கு மாகாணத்தில் கோத்தபய பின்னடைவு!

கடும்

கடும்

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். காலையில் இருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை அவர் பெற்றுள்ளார். இவருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் போட்டி நிலவி வருகிறது.

பாதி

பாதி

தற்போது கோத்தபய ராஜபக்சே 50% வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கிறார். இதனால் ஏறத்தாழ கோத்தபய ராஜபக்சவின் வெற்றி உறுதியாகிவிட்டது. கோத்தபய ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொண்டர்கள் இப்போதே கொண்டாட்டத்தில் ஈடுபாடு வருகிறார்கள்.

பேட்டி அளித்தார்

பேட்டி அளித்தார்

இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச பேட்டி அளித்துள்ளார். அதில் மக்களின் முடிவிற்கு தலை வணங்குகிறேன். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.

வாழ்த்து

வாழ்த்து

அதிபராக வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவை பாராட்டுகிறேன். தேர்தலில் எனக்கு வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் பணிகளை செய்த தொண்டர்களுக்கும் என்னுடைய நன்றி என்று ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச பேட்டி அளித்துள்ளார்.

English summary
Srilanka Presidential Elections: I accept my defeat to Gotabaya Rajapaksa says Sajith Premadasa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X