கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்னும் 1 வருடம்.. தம்பிக்கு அதிபர் பதவி.. அண்ணனுக்கு பிரதமர் பதவி.. மீண்டும் வரும் மஹிந்த ராஜபக்சே

இலங்கையின் பிரதமர் பதவியை பெறுவதற்கு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே தீவிரமாக முயற்சி செய்வார் என்று செய்திகள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Gotabaya Rajapaksa’s victory in Sri Lanka: It’s a sad day for Tamils, Vaiko says

    கொழும்பு: இலங்கையின் பிரதமர் பதவியை பெறுவதற்கு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே தீவிரமாக முயற்சி செய்வார் என்று செய்திகள் வருகிறது. இன்னும் ஒரு வருடத்திற்குள் அங்கு அதிரடி மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து அந்நாட்டின் புதிய அதிபராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே இன்று பதவி ஏற்றுள்ளார். இந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் போட்டி நிலவி வந்தது

    இதையடுத்து இலங்கையின் 7-வது அதிபராக கோத்தபாய ராஜபக்சே பதவியேற்றார். இதற்காக கொழும்பில் பெரிய அளவில் விழாக்கள், கொண்டாட்டங்கள் இன்று நடந்தது

    அதிபர் தேர்தலில் தமிழர், முஸ்லிம்கள் வாக்குகள் எனக்கு கிடைக்கவில்லை.. கோத்தபாய ராஜபக்ச ஒப்புதல்அதிபர் தேர்தலில் தமிழர், முஸ்லிம்கள் வாக்குகள் எனக்கு கிடைக்கவில்லை.. கோத்தபாய ராஜபக்ச ஒப்புதல்

    இன்னும் ஒரு வருடம்

    இன்னும் ஒரு வருடம்

    இலங்கையில் இன்னும் ஒரு வருடத்தில் பிரதமர் தேர்தல் நடக்க உள்ளது. அடுத்த வருடம் நடக்கும் பிரதமர் தேர்தல்தான் தற்போது ராஜபக்சே குடும்பத்தின் குறிக்கோளாக உள்ளது. அதிபர் தேர்தலில் தம்பி கோத்தபய ராஜபக்சே வென்றுள்ளதால், பிரதமர் தேர்தலை முன்னாள் அதிபர், அண்ணன் மஹிந்த ராஜபக்சே குறி வைத்துள்ளார்.

    ஏற்கனவே

    ஏற்கனவே

    கடந்த வருடமே முன்னாள் அதிபர் சிறிசேனவின் அதிரடி காரணமாக மஹிந்த ராஜபக்சே முறையின்றி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ரணில் விக்கிரமசிங்கேவின் சட்ட போராட்டம் மற்றும் எம்பிக்கள் ஆதரவு காரணமாக மஹிந்த ராஜபக்சே ஆட்சி கவிழ்ந்தது.

    மீண்டும் முயற்சி

    மீண்டும் முயற்சி

    இந்த நிலையில் தற்போது மீண்டும் மஹிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை குறி வைத்துள்ளார். ஆனால் மஹிந்த ராஜபக்சே தேர்தல் வரை காத்து இருப்பது சந்தேகம்தான் என்கிறார்கள். அதற்கு முன்பாகவே, ரணில் விக்கிரமசிங்கேவின் ஆதரவு எம்பிக்களை பதவி விலக வைத்து ஆட்சியை கலைக்க அவர் முயல்வார் என்று கூறுகிறார்கள்.

    பிரதமர் ரணில்

    பிரதமர் ரணில்

    பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியில் இருக்கும் எம்பிக்கள் உடன் மஹிந்த ராஜபக்சே ரகசியமாக பேச வாய்ப்புள்ளது என்கிறார்கள். ராஜபக்சே குடும்பத்தின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேகமாக அங்கு வளர்ந்து தற்போது ஆளும் கட்சியாக மாறியுள்ளது.

    ஐக்கிய தேசிய கட்சி எம்பிக்கள்

    ஐக்கிய தேசிய கட்சி எம்பிக்கள்

    பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி எம்பிக்களை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு இழுக்க ராஜபக்சே குடும்பம் முயலும் என்கிறார்கள். விரைவில் இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபக்சேவும், பிரதமராக மஹிந்த ராஜபக்சேவும் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

    English summary
    Srilanka President: Mahinda Rajapakse plans to become PM as Gotabaya Rajapakse wins in the Elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X