கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதலைக்கண்ணீர் வடிக்க வேண்டாம்.. தமிழக அரசியல் தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்.. பகீர்!

தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் தங்கள் நாட்டில் அரசியல் செய்ய வேண்டும் என்று ஈழத்தமிழர்கள் பற்றி பேசுகிறார்கள், என்று முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் எம்பி நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக அரசியல் தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்

    கொழும்பு: தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் தங்கள் நாட்டில் அரசியல் செய்ய வேண்டும் என்று ஈழத்தமிழர்கள் பற்றி பேசுகிறார்கள், அவர்கள் தேவையில்லாமல் முதலைக்கண்ணீர் வடிக்க வேண்டாம் என்று முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் எம்பி நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

    இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே நேற்று பதவி ஏற்றுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வி அடைந்துள்ளார்.

    இதனால் இலங்கையில் தமிழர்கள் மீண்டும் அச்சப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இலங்கையில் உள்நாட்டு போரின் போது கோத்தபய ராஜபக்சேதான் ராணுவ செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புலி வாலைப் பிடித்த நாயராக இலங்கை... பாகிஸ்தானை விடுமா அல்லது நட்பு இறுகுமா... இந்தியா வெயிட்டிங்!புலி வாலைப் பிடித்த நாயராக இலங்கை... பாகிஸ்தானை விடுமா அல்லது நட்பு இறுகுமா... இந்தியா வெயிட்டிங்!

    பலர் எதிர்ப்பு

    பலர் எதிர்ப்பு

    இவரின் வெற்றிக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக மக்களுக்கு இதனால் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று வைகோ, அன்புமணி, மு.க ஸ்டாலின், சீமான், ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய மூத்த தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். இது தொடர்பாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் எம்பி நமல் ராஜபக்சே கருத்து தெரிவித்துள்ளார்.

    ஈழத்தமிழர்கள் ஏன்?

    ஈழத்தமிழர்கள் ஏன்?

    நமல் ராஜபக்சே தனது பேட்டியில், தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் தங்கள் நாட்டில் அரசியல் செய்ய வேண்டும் என்று ஈழத்தமிழர்கள் பற்றி பேசுகிறார்கள். சந்தர்ப்ப ரீதியாக அவர்கள் ஈழத்தமிழர் அரசியலை கையில் எடுத்து இருக்கிறார்கள். தங்களுக்கு தேர்தலில் வாக்கு கிடைக்க வேண்டும் என்று இப்படி செய்கிறார்கள்.

    சுயநல அரசியல்

    சுயநல அரசியல்

    இன்னும் சிலர் மிகவும் சுயநலமாக அரசியல் செய்கிறார்கள். சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு அவர்கள் அறிக்கைகள் வெளியிடுகிறார்கள். இவர்கள் அரசியலை தவிர தங்கள் மக்களுக்கு வேறு எதுவும் செய்தது கிடையாது.

    கெடுதல் நினைக்கிறார்கள்

    கெடுதல் நினைக்கிறார்கள்

    ஈழத்தமிழர்களுக்கு இவர்கள் கெடுதல்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு என்று இவர்கள் நல்ல விஷயம் எதுவும் செய்தது கிடையாது. புதிய ஜனாதிபதியை விமர்சிப்பதை விட்டுவிட்டு மக்களுக்காக அவர்கள் சிந்திக்க வேண்டும்.

    எதிர்காலம் சிறப்பு

    எதிர்காலம் சிறப்பு

    தமிழர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையில் செயல்படுங்கள். தேவையில்லாமல் முதலைக்கண்ணீர் வடிக்க வேண்டாம். தமிழர்கள் இலங்கையின் தேசியத்தை உளமாற நேசிக்கும் வகையில் செயல்பட வேண்டும், என்று நமல் ராஜபக்சே கருத்து தெரிவித்துள்ளார்.

    English summary
    Srilanka Presidential Elections: Tamilnadu Politicians are shedding crocodile tears says Namal Rajapaksa.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X