கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆதரவாளர்களுக்கு ரொம்ப நன்றி.. அமைதியாக கொண்டாடுங்கள்.. கோத்தபய ராஜபக்சே செம ஹாப்பி!

தேர்தலில் எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி, என்று அதிபர் தேர்தலில் முன்னிலை வகிக்கும் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கொழும்பு: தேர்தலில் எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பயணிப்போம் என்று அதிபர் தேர்தலில் முன்னிலை வகிக்கும் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. இலங்கை அதிபர் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே 50% வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

Srilanka Presidential Elections: Thanks for everyones support says Gotabaya for taking a huge lead

இதனால் கோத்தபய ராஜபக்சே அதிபர் ஆக வெற்றிபெறுவது உறுதியாகி உள்ளது. 4,42,185 வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே 35,40,023 வாக்குகளும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 30,97,838 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதானால் சஜித் பிரேமதாச தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே தன்னுடைய வெற்றி குறித்து டிவிட் செய்துள்ளார். அதில் தேர்தலில் எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பயணிப்போம். இலங்கை மக்கள் ஒன்றாக இருக்க வேண்டிய நேரம் இது.

தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.. கோத்தபய ராஜபக்சேவிற்கு வாழ்த்துகள்.. சஜித் பரபர பேட்டி!தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.. கோத்தபய ராஜபக்சேவிற்கு வாழ்த்துகள்.. சஜித் பரபர பேட்டி!

தொண்டர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும், அமைதியாக கொண்டாட வேண்டும். பிரச்சாரத்தில் இருந்த அமைதி வெற்றிக்கு பின்பும் இருக்க வேண்டும். அமைதியாக தேர்தலை நடத்தியதற்கு நன்றி.

இந்த மாபெரும் வெற்றியைஅமைதி, ஒழுக்கம், கண்ணியத்துடன் கொண்டாடுவோம் என்று கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

English summary
Srilanka Presidential Elections: Thanks for everyone's support says Gotabaya Rajapaksa for taking a huge lead.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X