கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 நாள்தான் ஆகிறது.. அதற்குள் பிரதமர் பதவிக்கு திட்டம்.. பிளானை வெளிப்படையாக சொன்ன மகிந்த ராஜபக்சே!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும், பிரதமர் பதவிக்கு உடனே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மகிந்த ராஜபக்சேவிற்கு பிரதமர் பதவி - எச்சரிக்கும் வல்லுநர்கள்

    கொழும்பு: பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும், பிரதமர் பதவிக்கு உடனே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

    இறுதியில் இலங்கை அதிபர் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வி அடைந்துள்ளார்.

    இதனால் இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்சே குடும்பம் அதிகாரத்தை பெற்று இருக்கிறது. விரைவில் மகிந்த ராஜபக்சே புதிய பதவியை பெறுவார் என்று கூறுகிறார்கள்.

    இந்தியாவிற்கு வாங்க.. அழைப்பு விடுத்த மோடி.. ஓகே சொன்ன கோத்தபய ராஜபக்சே.. அடுத்த வாரம் வருகிறார்!இந்தியாவிற்கு வாங்க.. அழைப்பு விடுத்த மோடி.. ஓகே சொன்ன கோத்தபய ராஜபக்சே.. அடுத்த வாரம் வருகிறார்!

    மகிந்த ராஜபக்சே எப்படி

    மகிந்த ராஜபக்சே எப்படி

    இந்த நிலையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவிக்கு திட்டம் போட்டு வருகிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. இலங்கையின் பிரதமராக தற்போது ரணில் விக்கிரமசிங்கே இருக்கிறார். கடந்த வருடமே இவரை நீக்கிவிட்டு மகிந்த ராஜபக்சே பிரதமர் ஆனார்.

    சட்ட போராட்டம்

    சட்ட போராட்டம்

    ஆனால் சட்ட போராட்டம் மூலம் மீண்டும் ரணில் பிரதமராக தேர்வானார். தற்போது ஒரு வருடம் கழித்து மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே அதிபராக தேர்வாகி உள்ளார். இதனால் மீண்டும் பிரதமர் பதவியை பெறுவதற்கு மகிந்த ராஜபக்சே தீவிரமாக திட்டமிட்டு வருகிறார்.

    பிளான் என்ன

    பிளான் என்ன

    இந்த நிலையில் மகிந்த ராஜபக்சே தன்னுடைய பிளானை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவர் தனது பேட்டியில், அதிபரும், மந்திரிசபையும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிபர், பிரதமர் இருவரும் ஒரே கட்சியாக இருந்தால் நாடு நன்றாக இருக்கும்.

    சொன்னார்

    சொன்னார்

    இதனால் மக்கள் தீர்ப்பை மதித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகவேண்டும். விரைவில் நாடாளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ரணிலுக்கு போதுமான ஆதரவு இல்லை. எம்பிக்கள் ஆதரவும் அவருக்கு இல்லை, என்று மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.

    English summary
    Srilanka: Ranil Wickremesinghe should resign, Mahinda Rajapakse's ultimate plan for PM post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X