கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பாதிப்பு: அதீத ஆபத்துடைய நகரங்களுள் சென்னை- இலங்கை அரசு

Google Oneindia Tamil News

கொழும்பு: அதீத ஆபத்து உள்ள நகரங்களில் ஒன்றாக சென்னை திகழ்கிறது என இலங்கையின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Recommended Video

    ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேறுவது ஏன் ஆபத்தானது?

    உலகமே கொரோனாவை ஒழிக்க முழு வீச்சில் போராடி வருகிறது. இலங்கையில் இதுவரை 113 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 65 வயது கொரோனா நோயாளி ஒருவர் நீரிழிவு நோய், சிறுநீரக கோளாறுகள் காரணமாக கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.

    Srilankan Government announces that Chennai is High risk zone

    இதன் மூலம் இலங்கையில் முதல் கொரோனா உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் சென்னையிலிருந்து வந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததை இலங்கை சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

    இதையடுத்து கடந்த 14 நாட்களில் சென்னை சென்று திரும்பியவர்கள் தாங்களாகவே வந்து விவரங்களை தெரிவிக்குமாறு இலங்கை சுகாதாரத் துறை இயக்குநர் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் சென்னையிலிருந்து நேற்று இலங்கை வந்த இருவருக்கு கொரோனா இருக்கிறது.

    துவரங்குறிச்சியைச் சோ்ந்தவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி.. திருச்சி கலெக்டர் சிவராசு தகவல் துவரங்குறிச்சியைச் சோ்ந்தவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி.. திருச்சி கலெக்டர் சிவராசு தகவல்

    அது போல் கடந்த வாரம் சென்னையிலிருந்து வந்த இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சென்னை மிக அதீத ஆபத்தான நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    மார்ச் மத்தியில் இலங்கையில் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் ஒருவர் இந்திய சுற்றுலா பயணி, மற்றும் 3 பேர் இலங்கை நாட்டவர்கள். இவர்கள் 4 பேரும் இந்தியாவிலிருந்து இலங்கை வந்தவர்கள். அது போல் அண்மையில் இந்தியாவிலிருந்து வந்த 8 பேருக்கு கொரோனா உள்ளது.

    மொத்தம் 9 நோயாளிகள் மருத்துவமனைகளிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 17 ஆம் தேதி முதல் விமான நிலையங்களுக்கு மற்ற விமானங்கள் வருவதை நிறுத்திக் கொண்டது. இதையடுத்து இலங்கை முழுவதும் முடக்கப்பட்டு மாவட்டங்களுக்கான பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    English summary
    Srilankan Government calls Chennai as Covid 19 high risk Zone after first death confirmed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X