கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீன பயணிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி.. பயணிகளுக்கு விசா வழங்க இலங்கை மறுப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    சீனாவை புரட்டிப்போட்ட கோரோனா வைரஸ்! தெரிந்து கொள்ள வேண்டியவை

    கொழும்பு: சீனாவிலிருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டதை அடுத்து விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

    சீனாவில் கொரோனா என்ற வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடம் பரவி வருகிறது. இதனால் அந்நாட்டில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 2500 க்கும் மேற்பட்டோருக்கு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இந்த நோய் இரு நிலைகளை கொண்டுள்ளது. இதில் முதல் நிலையில் நோயாளிக்கு நோய் பாதிப்பு இருந்தால் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை கொடுத்து குணப்படுத்தலாம். ஆனால் இரண்டாம் நிலையில் இருந்தால் மரணம் நிச்சயம் ஏற்படும்.

    Srilankan Government refuses Visa for Chinese

    இதனால் சீனாவில் பதற்றமும் பீதியும் நிலவி வருகிறது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா போன்ற பல உலக நாடுகள் கொரோனா வைரஸ் தங்களது நாடுகளுக்குள் பரவுவதை தடுக்க பல்வேறு மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    ஓ இதுதான் கொடூர கொரோனா வைரஸா? இப்படித்தான் இருக்குமா!.. சீனா வெளியிட்ட பகீர் புகைப்படம்! ஓ இதுதான் கொடூர கொரோனா வைரஸா? இப்படித்தான் இருக்குமா!.. சீனா வெளியிட்ட பகீர் புகைப்படம்!

    இந்நிலையில், கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக, சீனா பயணிகளுக்கு வருகை தந்தவுடன் விசா (Visa on Arrival) வழங்குவதை இலங்கை அரசு ரத்து செய்துள்ளது. கடந்த ஜனவரி 19-ஆம் தேதி சீனாவில் இருந்து இலங்கை வந்த 40 வயது சீனப் பெண் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஜனவரி 25ஆம் தேதி இலங்கை விமான நிலையத்தில் அப்பெண் வெளியேறும் போது கண்டறியப்பட்டார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வைரஸ் நோய் மேலும் பரவாமல் தடுக்க சீனர்கள், சீனாவிலிருந்து வரும் மற்ற நாட்டினர்களுக்கு விசா வழங்க இலங்கை அரசு ரத்து செய்துள்ளது.

    English summary
    Srilankan Government refuses Visa for Chinese after it found Coronavirus in a Chinese Woman who had gone to Srilanka in Tourist visa.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X