கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சார்.. வாழ்த்துகள்.. நீங்க "அம்மா"வாயிட்டீங்க.. உங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கு!

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் வயிற்று வலி என்று மருத்துவமனைக்கு சென்ற ஒரு ஆணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தெற்கு மாத்துறையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். தாடியுடன் வந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆண்கள் வார்டுக்கு அனுப்பி வைத்தனர்.

பிரசவ வார்டு

பிரசவ வார்டு

ஆண்கள் வார்டில் அவரை பரிசோதித்த மருத்துவர், வயிற்றில் குழந்தை இருப்பதற்கான அறிகுறி இருந்ததால் அதிர்ச்சி அடைந்து சோதனை செய்தனர். மேலும் எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்பதால் அவர் அந்த மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டுக்கு அனுப்பப்பட்டார். அங்கு செல்லும்போது வலியால் துடித்துக் கொண்டே சென்றார்.

மீசை

மீசை

தாடி, மீசையுடன் ஒரு ஆண் பிரசவ வார்டுக்கு வந்ததை பார்த்த மற்ற பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில் பெண்ணாக பிறந்த அந்த நபர் ஹார்மோன் சுரப்பு காரணமாக ஆண்களை போல் வாழ்ந்தார். தாடி. மீசை வளர்ந்ததற்கும் காரணம் அதுதான்.

மருத்துவமனை

மருத்துவமனை

அவர் மனதளவில் ஆணாக இருந்தாலும் உடலளவில் பெண்ணாக இருந்தார். அதனால்தான் அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடிந்தது. எனினும் அவரால் குழந்தைக்கு பால் கொடுக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த குழந்தையை மருத்துவமனை நிர்வாகமே கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

மருத்துவமனை

மருத்துவமனை

அவர் அந்த குழந்தையை வளர்க்க விரும்பவில்லை என கூறிவிட்டார். மேலும் அவரது அடையாள அட்டைகளிலும் ஆண் என்றே உள்ளது. ஆட்டோ ஓட்டுநராக உள்ள அவரது பெயர் உள்ளிட்ட தகவல்களை அந்த மருத்துவமனை நிர்வாகம் வெளியிட மறுத்துவிட்டது. இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary
Srilankan man gives birth to a baby boy in a hospital. He admitted with a complaint of stomach ache.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X