கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கையில் தேடுதல் வேட்டை.. ஐஎஸ் தீவிரவாதிகள் இருவரை சுட்டுக் கொன்றது ராணுவம்

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இருவரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

இலங்கையில் கடந்த வாரம் மனிதவெடிகுண்டுகள் 8 இடங்களில் வெடித்ததால் 350-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள்தான் காரணம் என சொல்லப்படுகிறது. மேலும் 160 தீவிரவாதிகள் ஊருவியுள்ளதாக தகவல் கிடைத்தது.

இலங்கையில் அடுத்த குண்டுவெடிப்பு.. ராணுவ சோதனையின் போது பரபரப்பு.. தொடர் பதற்றம்! இலங்கையில் அடுத்த குண்டுவெடிப்பு.. ராணுவ சோதனையின் போது பரபரப்பு.. தொடர் பதற்றம்!

தேடுதல் வேட்டை

தேடுதல் வேட்டை

இதையடுத்து அந்நாட்டு அதிபர் சிறிசேனா தீவிரவாதத்தை வேரோடு ஒழிப்போம் என்றார். இதையடுத்து நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

தற்கொலை படை தாக்குதல்

தற்கொலை படை தாக்குதல்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமதுங்கே வீடு அருகே தற்கொலை படை தாக்குதலுக்கான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அங்கு மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள்.

தீவிரவாதிகள்

தீவிரவாதிகள்

இலங்கையின் அம்பாறை சம்மாந்துறையில் உள்ள வீடு ஒன்றில் வெடிகுண்டு மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. துப்பாக்கிச்சூட்டை அடுத்து பதுங்கி இருந்த தீவிரவாதிகள் தப்பிசென்றனர்.

தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

இந்நிலையில் இலங்கையில் ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகப்படும்படியாக இருந்த இருவரை அந்நாட்டு ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். அப்போது அவர்கள் இருவரும் ராணுவத்தினர் மோதியுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து ஐஎஸ் கொடிகள், பரப்புரை சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

English summary
Sri Lanka troops kill two suspected IS gunmen, says official.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X