கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீர்கொழும்பில் திடீர் வன்முறை.. வதந்திகளை தடுக்க சமூக வலைத்தளங்ளை மீண்டும் முடக்கிய இலங்கை

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் நேற்று மாலை முதல் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு பகுதியில் இரு குழுக்களுக்கிடையே நேற்று திடீரென மோதல் மூண்டது. இதனையடுத்து அங்கு பதற்றமான சூழல் உருவானது. இதனால் நேற்று முதல் அந்நாட்டில் சமூக வலைத்தளங்கள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன.

Sudden confrontation between two groups..Social websites blocked again in srilanka

நேற்று நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக வதந்திகள் பரவி, அதனால் புதிய வன்முறைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு உளவுத்துறை அவசர எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து சமூக வலைத்தளங்களை முடக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாவதை தடுக்கும் நோக்கில், சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பு பகுதியில் நேற்றிரவு முதல் இன்று காலை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஹமாஸ் இயக்கத்தின் டிஜிட்டல் போராளிகள் மீது வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்த இஸ்ரேல் ஹமாஸ் இயக்கத்தின் டிஜிட்டல் போராளிகள் மீது வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்த இஸ்ரேல்

முன்னதாக கடந்த மாதம் 21-ம் தேதி ஈஸ்டர் தினதத்தன்று இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து அன்று முதல் 9 நாட்களுக்கு சமூகவலைதளங்கள் முடக்கப்பட்டிருந்தன.

பின்னர் சமூக வலைத்தளங்களுக்கான தடை நீக்கப்பட்ட நிலையில், நீர்கொழும்பு பகுதியில் நேற்று ஏற்பட்ட மோதல் காரணமாக மீண்டும் சமூக வலைதளங்கள் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
In SriLanka Facebook, Whatsapp, Twitter, YouTube and other social websites blocked again temporarily from yesterday evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X