கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொழும்பு.. சாப்பிடுவதற்கு கியூவில் நிற்பது போல.. உடலில் கட்டிய குண்டை வெடிக்கச் செய்த தீவிரவாதி

Google Oneindia Tamil News

Recommended Video

    Sri Lanka News: கொழும்புவில் உடலில் கட்டிய குண்டை வெடிக்கச் செய்த தீவிரவாதி- வீடியோ

    கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் திருநாளான ஞாயிற்றுக்கிழமை 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்பவத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்தியவர் ஹோட்டலில் காலை உணவை சுவைக்க வரிசையில் நிற்பது போல் நின்று உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.

    இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் தேவாலயங்களில் வழிபாடு நடத்தினர்.

    அப்போது 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

    12 பெட்டி நிறைய ஆபாசப் பட சிடிக்கள்.. தூக்கி எறிந்த பெற்றோர்.. 60 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு மகன் வழக்கு12 பெட்டி நிறைய ஆபாசப் பட சிடிக்கள்.. தூக்கி எறிந்த பெற்றோர்.. 60 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு மகன் வழக்கு

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    4 ஹோட்டல்களில் இலங்கையில் சின்னமான் கிராண்ட் என்ற ஹோட்டலில் தற்கொலை படை தாக்குதல் நடத்தியவர் குண்டுவெடிப்பை நிகழ்த்தவே அந்த ஹோட்டலில் தங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பதிவு

    பதிவு

    குண்டுவெடிப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர் காலை உணவுக்காக பஃப்பே சிஸ்டமில் வரிசையில் நின்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை ஹோட்டலில் அறை எடுத்த அவர் தனது பெயர் முகமது அசாம் முகமது என பதிவு செய்து கொண்டார்.

    ஈஸ்டர் கொண்டாட்டம்

    ஈஸ்டர் கொண்டாட்டம்

    இதுகுறித்து அந்த ஹோட்டலின் பெயர் வெளியிட விரும்பாத மேலாளர் ஒருவர் கூறுகையில் காலை 8.30 மணி இருக்கும். அப்போது ஹோட்டல் பரபரப்பாக இருந்தது. அனைவரும் குடும்பத்தினருடன் ஈஸ்டரை கொண்டாட வந்திருந்தனர்.

    பஃப்பே சிஸ்டம்

    பஃப்பே சிஸ்டம்

    அப்போதுதான் அந்த தற்கொலை தாக்குதல் நடத்திய நபர் காலை உணவுக்காக பஃப்பே சிஸ்டமில் நின்றிருந்தார். இதைத் தொடர்ந்து உடலில் கட்டியிருந்த குண்டுகளை அவர் வெடிக்க செய்தார். இந்த தாக்குதலில் விருந்தினர்களை வரவேற்றுக் கொண்டிருந்த எங்கள் மேலாளரும், அந்த தாக்குதலை நடத்தியவரும் உயிரிழந்தனர் என்றார்.

    English summary
    The suicide bomber waited in a queue for the Easter Sunday breakfast buffet at Sri Lanka's Cinnamon Grand hotel.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X