கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கை குண்டுவெடிப்பு துரதிருஷ்டவசமானது என தமிழிசை பேட்டி… அமைதி திரும்பவும் வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

Recommended Video

    அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள், இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

    கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் துரதிருஷ்ட வசமானது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்,

    இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 160க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    தொடர்ந்து கொச்சிக்கடை சுட்டுவாபிட்டியா உள்ளிட்ட இடங்களில் பதற்றம் நீடித்து வருகிறது. குறிப்பாக கொச்சிக்கரை பகுதியில் உள்ள அந்தோனியார் ஆலயம், நீர்க் கொழம்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

     குண்டு வெடிப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது... நடவடிக்கை எடுக்காதது ஏன்?... அதிர்ச்சி தகவல் குண்டு வெடிப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது... நடவடிக்கை எடுக்காதது ஏன்?... அதிர்ச்சி தகவல்

    இலங்கையில் பெரும் பதற்றம்

    இலங்கையில் பெரும் பதற்றம்

    தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் ஆலயங்களில் பாதிக்கப் பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த தாக்குதலில் யார் ஈடுபட்டது என்பது தகவல்கள் அறியப்படவில்லை. தொடர் குண்டு வெடிப்பால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவிவருகிறது.

    தமிழிசை பேட்டி

    தமிழிசை பேட்டி

    இந் நிலையில் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் துரதிருஷ்டவசமானது என்று தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியிருப்பதாவது:

    விசாரணை வேண்டும்

    விசாரணை வேண்டும்

    சாதி கலவரத்தை தூண்டுவோர் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். மதுரையில் இயந்திர அறைக்குள் அனுமதியின்றி அதிகாரி சென்றது பற்றி விசாரணை நடத்த வேண்டும்.

    துரதிருஷ்டம்

    துரதிருஷ்டம்

    பெண் வட்டாட்சியரை ஆளுங்கட்சி அனுப்பிவைத்தது போன்ற தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகின்றன. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் துரதிருஷ்டவசமானது. அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்றார்.

    English summary
    Tamilnadu bjp state leader tamilisai condemns srilanka blast.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X