கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கையில் நீடிக்கும் பதற்றம்.. மர்ம நபர்களிடமிருந்து 21 கையெறி குண்டுகள் பறிமுதல்.. தொடரும் சோதனை!

இலங்கையில் ராணுவம் நடத்திய சோதனையில் 21 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கையில் ராணுவம் நடத்திய சோதனையில் 21 கையெறி குண்டுகள் பறிமுதல்- வீடியோ

    கொழும்பு: இலங்கையில் ராணுவம் நடத்திய சோதனையில் 21 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இலங்கை குண்டுவெடிப்பை அடுத்து அங்கு தொடர்ந்து சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கொழும்பு முழுக்க பலத்த ராணுவ பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 300க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

    தீவிரவாத தாக்குதல்.. 2 முறை எச்சரிக்கை விடுத்தது இந்தியா.. அலட்சியம் காட்டியது இலங்கை தீவிரவாத தாக்குதல்.. 2 முறை எச்சரிக்கை விடுத்தது இந்தியா.. அலட்சியம் காட்டியது இலங்கை

     தீவிர சோதனை

    தீவிர சோதனை

    இதில் மொத்தம் 450 பேர் வரை பலியானார்கள். இந்த குண்டுவெடிப்பால் ஏற்பட்ட காயங்கள் இன்னும் ஆறவில்லை. இந்த தாக்குதல் குறித்து இலங்கை அரசுக்கு அந்நாட்டு உளவுத்துறை ஏற்கனேவே எச்சரிக்கை விடுத்து இருந்தது. அங்கு மேலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு இருப்பதால் ராணுவம் தீவிர சோதனைகளை பல இடங்களில் நடத்தி வருகிறது.

     எங்கு வைத்தனர்

    எங்கு வைத்தனர்

    முக்கியமாக எல்லை பகுதியில் ராணுவம் தீவிர சோதனையை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இலங்கையில் ராணுவம் நடத்திய சோதனையில் 21 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கொழும்பு கடற்கரை அருகே முகத்துவாரம் என்ற பகுதியில் இந்த பறிமுதல் நடந்துள்ளது. படகு ஒன்றுக்கு அருகில் இந்த குண்டுகளை அவர்கள் மறைத்து வைத்து இருக்கிறார்கள்.

     ராணுவம் எப்படி

    ராணுவம் எப்படி

    ராணுவம் நடத்திய சோதனையில் நவீன ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நவீக ரக துப்பாக்கிகள், சிறிய ரக வெடிகுண்டுகள், வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது . ஆனால் இந்த குண்டுகள் பெரிய சக்தி வாய்ந்த குண்டுகள் கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.

     என்ன விசாரணை

    என்ன விசாரணை

    இந்த ஆயுதங்களை வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் ராணுவம் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள், இவர்களுக்கு பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்பது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

    English summary
    The army seized 21 arm grenade bombs in a search in Sri Lanka Colombo.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X