கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொழும்பு சர்வதேச விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

கொழும்பு: கொழும்பு பண்டார நாயக சர்வதேச விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கம் செய்யப்பட்டது.

'ஈஸ்டர்' தினமான நேற்று, இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவலாயங்கள் நட்சத்திர விடுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இந்த கொடூர தாக்குல்களில் பிரார்த்தனைக்கு வந்த வெளிநாட்டினர் உள்பட 225 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

The bomb detonation near Colombo International airport

12 பெட்டி நிறைய ஆபாசப் பட சிடிக்கள்.. தூக்கி எறிந்த பெற்றோர்.. 60 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு மகன் வழக்கு12 பெட்டி நிறைய ஆபாசப் பட சிடிக்கள்.. தூக்கி எறிந்த பெற்றோர்.. 60 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு மகன் வழக்கு

இதன் காரணமாக இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. போலீசாரக்கு விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உச்சகட்ட கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகிறாரகள். இந்த கொடூர செயலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இந்நிலையில் கொழும்பு பண்டார நாயக சர்வதேச விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டை கைப்பற்றிய போலீசார் அதனை வெற்றிகரமாகக செயலிழக்கம் செய்தனர்.

இதையடுத்து விமான நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் வேறு வெடிகுண்டுகள் ஏதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. மேலும் கொழும்பு விமான நிலையத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

English summary
The bomb detonation near Colombo International airport in sri lanka, Blast Action Lossed by police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X