கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காணாமல் போன 20,000 தமிழர்கள் இறந்துவிட்டனரா? கோத்தபாய கருத்துக்கு த.தே.கூ. கடும் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன 20,000 தமிழர்கள் இறந்துவிட்டதாக அதிபர் கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

2009 இலங்கை இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட 20,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை. காணாமல் போனவர்களின் நிலையை அறிவிக்க கோரி அவர்களது உறவினர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Thousands of war missing Tamils dead: says Gotabaya Rajapaksa

ஆனால் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே, காணாமல் போனதாக கூறப்படும் 20,000 தமிழரும் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார். 20,000 பேருக்கும் மரண சான்றிதழும் வழங்கப்படும் எனவும் கோத்தபாய கூறியுள்ளார்.

மணிப்பூர் வழக்கு: சபாநாயகருக்கான அதிகாரங்கள்... நாடாளுமன்றம் பரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவுமணிப்பூர் வழக்கு: சபாநாயகருக்கான அதிகாரங்கள்... நாடாளுமன்றம் பரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

இது போராடி வரும் காணாமல் போனோரின் உறவினர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. சிறீதரன், காணாமல் போனவர்கள் அனைவரும் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தவர்கள். ஆகையால் இலங்கை ராணுவமே பதில் சொல்ல வேண்டும் என்றார்.

English summary
Srilankan President Gotabaya Rajapaksa said that Thousands of war missing Tamils were dead.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X