கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இரவோடு இரவாக.. முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிப்பு.. டிடிவி தினகரன் கண்டனம்

Google Oneindia Tamil News

கொழும்பு: யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னம் இரவோடு, இரவாக இடிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

TTV Dinakaran condemn demolition of the Mullivaikkal monument

இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இரவோடு, இரவாக இடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது; கடும் கண்டனத்திற்குரியது. இலங்கையின் பூர்வ குடிகளான தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடும் இத்தகைய நடவடிக்கைகள் சரியானதல்ல.

தமிழ் மக்களின் எண்ணங்களில் நிறைந்திருக்கும் போராட்டத்தின் நினைவுகளை, சின்னங்களை அழிப்பதன் மூலம் அகற்றிவிட முடியாது. தமிழர்களின் உயர்வையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக இப்படி சர்வாதிகாரமாக நடந்து கொள்வது விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும். இதனை இலங்கை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

English summary
TVV Dinakaran, the General Secretary of the AMMK Party has said that the demolition of the Mullivaikkal monument at the Jaffna University campus is reprehensible.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X