கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமர் பதவி.. ரணில் நிம்மதி! சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக்க ஐதேக செயற்குழு ஒப்புதல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக்க ஐதேக செயற்குழு ஒப்புதல்! | Sajith Premadasa

    கொழும்பு: தமது பிரதமர் பதவிக்கு எதிராக எந்த கலகக் குரலும் கிளம்பாது என்பது உறுதி செய்யப்பட்டதால் அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சஜித் பிரேமதாச போட்டியிடுவார் என ரணில் விக்கிரமசிங்கே அறிவித்தார். அக்கட்சியின் செயற்குழுவில் சஜித் பிரேமதாசவின் பெயரை முன்மொழிந்து ஏகமனதாக ஒப்புதலையும் பெற்றுத் தந்தார் ரணில்.

    இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரரான கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுகிறார்.

    ஜேவிபியின் வேட்பாளராக அனுரகுமாரச திசாநாயக்க களத்தில் உள்ளார். பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பதில் பெரும் குழப்பம் நீடித்தது.

    அமெரிக்கா கோபம் பற்றி எங்களுக்கென்ன.. நியூயார்க்கில் ஈரான் அதிபரை சந்தித்து பேசிய மோடிஅமெரிக்கா கோபம் பற்றி எங்களுக்கென்ன.. நியூயார்க்கில் ஈரான் அதிபரை சந்தித்து பேசிய மோடி

     சஜித் கலகக் குரல்

    சஜித் கலகக் குரல்

    பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தாமே அதிபர் வேட்பாளராக போட்டியிட விரும்பினார். ஆனால் மறைந்த முன்னாள் அதிபர் பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச தாமே வேட்பாளர் என பிடிவாதம் காட்டினார்.

     சஜித்துக்கு ஆதரவு

    சஜித்துக்கு ஆதரவு

    அத்துடன் தமது ஆதரவாளர்களையும் கட்சியில் ஒருங்கிணைத்தார். இதனால் சஜித்தையே வேட்பாளராக அறிவிக்க வேண்டிய நெருக்கடி ரணிலுக்கு ஏற்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியில் சஜித்துக்கு ஆதரவும் அதிகமாக இருந்தது.

     ஐதேக செயற்குழு

    ஐதேக செயற்குழு

    இதனால் அவரையே வேட்பாளராக ஏற்றுக் கொள்வது என அக்கட்சியும் முடிவு செய்தது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவியில் நீடிப்பார் என்கிற ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

     சஜித்துக்கு ஐதேக ஒப்புதல்

    சஜித்துக்கு ஐதேக ஒப்புதல்

    தமது பதவிக்கு ஆபத்து இல்லை என்பதற்கான உறுதிமொழியை கட்சியிடம் இருந்து பெற்றுக் கொண்ட பின்னர், சஜித பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார் ரணில். அக்கட்சியின் செயற்குழுவும் சஜித பிரேமதாசவை அதிபர் தேர்தல் வேட்பாளராக ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

    English summary
    Srilanka's United National Party Working Committee apporved that Sajith Premadasa as the party's candidate for the upcoming presidential elections on November 16.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X