கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிபர் தேர்தல்: கோத்தபாயவுக்கு அமெரிக்கா ஆதரவு? குடியுரிமையை வாபஸ் பெற்றது?

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கையில் ராணுவம் நடத்திய சோதனையில் 21 கையெறி குண்டுகள் பறிமுதல்- வீடியோ

    கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள கோத்தபாய ராஜபக்சேவுக்கு ஆதரவாக அவரது அமெரிக்கா குடியுரிமையை அந்நாடு ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இலங்கையில் இந்தியா, சீனா இருநாடுகளின் ஆதிக்கம்தான் இருந்து வந்தது. இவற்றின் ஆதரவாளர் ஒருவர்தான் இலங்கை அதிபராக இருந்து வந்தார்.

    us withdraws gotabaya citizenship

    ஆனால் இந்தியாவின் பிடி இலங்கையில் நழுவிவிட்டது. சீனா சார்புதான் இலங்கை அரசிடம் அதிகமாக வெளிப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இலங்கையில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் சம்பவங்கள் அதிபர் தேர்தலை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றன. அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில் அமெரிக்காவில் அவர் மீது போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டது.

    அமெரிக்கா குடியுரிமையும் பெற்றுள்ளதால் கோத்தபாய ராஜபக்சேவுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் ஈஸ்டர் நாளில் இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 359 பேர் பலியாகினர்.

    நெஞ்சை பிழிய வைத்த மனிதவெடிகுண்டாக வெடித்தவரின் பிஞ்சு மகளின் 'வாப்பா' குரல்!நெஞ்சை பிழிய வைத்த மனிதவெடிகுண்டாக வெடித்தவரின் பிஞ்சு மகளின் 'வாப்பா' குரல்!

    இத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றாலும் இதன் பின்னணி யார் என்பது குறித்த மர்மம் விலகவில்லை. இந்நிலையில் திடீரென தாம் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்; இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழித்தே தீருவேன் என தேர்தல் பிரசாரத்தை கோத்தபாய வெளிநாட்டு ஊடகம் மூலம் தொடங்கி இருந்தார்.

    தற்போது கோத்தபாய ராஜபக்சேவுக்கு ஆதரவாக அமெரிக்கா அந்நாட்டு குடியுரிமையை திரும்பப் பெற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது கோத்தபாயவை அமெரிக்கா ஆதரிக்கும் நிலைப்பாடு என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

    இதன்மூலமாக இலங்கையில் இந்தியா-சீனாவை ஓரம்கட்டிவிட்டு தாம் விரும்பும் கைப்பொம்மையாக கோத்தபாயவை அதிபராக்க அமெரிக்கா முயற்சிக்கிறது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

    English summary
    Srilankan media sources said that US withdraw its Citizenship for Gotabaya Rajapaksa.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X