கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை... 19வது அரசியலமைப்புச் சட்ட திருத்தம்.. அப்படின்னா என்ன... ஓகே சொன்ன கோத்தபய!!

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட 19வது அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தில் அதிபரின் பதவிக் காலத்தை குறைத்து, நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை அதிகரித்து கடந்த அரசு திருத்தங்களை மேற்கொண்டு இருந்தது.

Recommended Video

    மீண்டும் Mahinda Rajapaksa பிரதமராகிறாரா? | Oneindia Tamil

    இதில் தற்போது திருத்தங்கள் கொண்டு வருவதற்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து இலங்கையில் நடந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா தொடர்பான இலங்கை மக்கள் கட்சியின் அமைச்சரவைக் கூட்டத்தில் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் கேஹெலியா ராம்புக்வெல்லா பேசியிருந்தார். அப்போது, ''நாட்டின் 19வது அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதில் திருத்தம் கொண்டு வந்து, 20A அறிமுகம் செய்யப்படும்'' என்றார்.

    What is 19th Amendment in Sri lanka and why Gotabaya Rajapaksa brings changes

    ஆனால், 19வது அரசியலமைப்புச் சட்டத்தில் எங்கெங்கு மாற்றங்கள் கொண்டு வரப்படும், எதுமாதிரியான மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்பது குறித்து எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை. முக்கியமாக அதிபரின் பதவிக்காலம் குறைக்கப்பட்டுள்ளது. இரண்டு முறைக்கு மேல் ஒருவர் அந்த நாட்டின் அதிபராக இருக்க முடியாது என்று முந்தைய அரசால் திருத்தம் கொண்டு வரப்பட்டு இருந்தது.

    19வது அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டுமானால், 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 150 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது இலங்கை மக்கள் கட்சிக்கு இந்த ஆதரவு இருக்கிறது. ஆதலால் எளிதில் மாற்றங்களை கொண்டு வரலாம்.

    கடந்தாண்டு நவம்பர் மாதம் இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது சகோதரரும் அந்த நாட்டின் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி அந்த நாட்டின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இந்த அரசியலமைப்புச் சட்டம் அந்த நாட்டின் நீதிமன்றம், தேர்தல் கமிஷன், பொதுத்துறை சேவைகள் ஆகியவற்றுக்கு தனிச்சுதந்திரம் அளிக்கிறது. இரட்டை குடியுரிமை பெற்று இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று 19வது அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. தற்போதைய அதிபர் கோத்தபய இரட்டை குடியுரிமை பெற்று இருக்கிறார்.

    சென்னையில் வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம்.. ஆட்டோ டிரைவர் கைதுசென்னையில் வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம்.. ஆட்டோ டிரைவர் கைது

    19ஆவது திருத்தம் என்றால் என்ன?

    இலங்கை அரசியலமைப்பில் 19வது திருத்தம் 2015ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. இதுதான் இறுதி திருத்தம்.
    அரசியலமைப்பின்படி ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்க முடியும் என்று இருந்ததை 18ஆவது சட்ட திருத்தத்தில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நீக்கினார்.

    இந்த திருத்தத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறி இருந்தார். அதன்படி மாற்றம் கொண்டு வந்தார். அதன்படி 18ன் சிறப்பு அதிகாரங்களை 19ல் குறைத்தார். ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும் என்றும், அவரது பதவிக்காலத்தை ஆறு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக குறைத்தார்.

    மேலும் இந்த திருத்தத்தின்படி, தேர்தல் ஆணைக்குழு, பொதுச் சேவைகள் ஆணைக்குழு, தேசிய போலீஸ் ஆணைக்குழு ஆகியவை உருவாக்கப்பட்டன.

    English summary
    What is 19th Amendment in Sri lanka and why Gotabaya Rajapaksa brings changes
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X