கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கை குண்டு வெடிப்பின் பின்னணியில் யார்?

Google Oneindia Tamil News

Recommended Video

    அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள், இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

    கொழும்பு: 3 தேவாலயங்கள், 3 ஹோட்டல்கள் என இலங்கையில் 6 இடங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இதன் பின்னணி என்னவாக இருக்கும் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்திற்கு பிறகு இலங்கையில் அமைதி நிலவி வந்தது. ஆனால் இப்போதுதான் முதல் முறையாக மிகப்பெரிய தாக்குதலை இலங்கை எதிர்கொண்டுள்ளது.

    Who is behind Srilanka bomb blast incidents?

    விடுதலை புலிகள் முற்றிலுமாக இல்லாத நிலையில், தமிழர்கள் பகுதி முழுக்க ராணுவம் குவிக்கப்பட்டு அவர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் யார் இருப்பார்கள் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.

    இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி வகிக்க கூடாது என்பது அதிபர் சிறிசேனா விருப்பம். அவரை பதவி நீக்கம் செய்துவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக்கியவர்தான் சிறிசேனா. இதற்கு புத்த பிட்சுகள் மற்றும் பவுத்த அமைப்புகள் ஆதரவு இருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் கடும் உத்தரவாலும், போதிய எம்பிக்கள் ஆதரவு இருந்ததாலும், மீண்டும், ரணில் விக்ரமசிங்கே பிரதமராகியுள்ளார்.

    இலங்கை குண்டுவெடிப்பை உன்னிப்பாக கவனிக்கிறோம்.. சுஷ்மா டிவிட்.. உதவி எண்கள் அறிவிப்பு! இலங்கை குண்டுவெடிப்பை உன்னிப்பாக கவனிக்கிறோம்.. சுஷ்மா டிவிட்.. உதவி எண்கள் அறிவிப்பு!

    இந்த நிலையில், இந்த குண்டு வெடிப்புகள், ரனில் விக்கிரசிங்கே அரசுக்கு எதிரான சதியாகக் கூட இது இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ரணில் ஆட்சியை விரும்பாத யாரேனும் அமைப்புகள் அல்லது சிலர் இந்த குரூர நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதுவரை குண்டு வெடிப்புக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இதுபோன்ற பல்வேறு ஐயப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

    English summary
    Who was behind Srilanka bomb blast incidents, here is the detail.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X