கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"750 கிமீ ரேஞ்ச்!" பக்கா ஸ்கெட்ச் உடன் களமிறங்கும் சீன உளவு கப்பல்! உற்று நோக்கும் இந்தியா

Google Oneindia Tamil News

கொழும்பு: இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன கப்பல் இலங்கைக்குச் சென்றுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

சீனாவில் செயல்பாடுகள் தென் கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. முதலில் தைவான் விவகாரத்தில் நான்சி பெலோசி வருக்குக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

எதிர்ப்பை தெரிவித்தது மட்டுமின்றி நான்சி பெலோசி அங்கிருக்கும் போதே போர்ப் பயிற்சிகளையும் மேற்கொண்டது. இது உலக நாடுகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இலங்கை ஹம்பன்தோட்டா துறைமுகத்தை வந்தடைந்தது சீன உளவு கப்பல் யுவான் வாங் 5 இலங்கை ஹம்பன்தோட்டா துறைமுகத்தை வந்தடைந்தது சீன உளவு கப்பல் யுவான் வாங் 5

 உளவு கப்பல்

உளவு கப்பல்

இந்தச் சம்பவம் ஓய்வதற்குள் இலங்கைக்குத் தனது ராணுவ கப்பலை அனுப்பி உள்ளது சீனா. இந்த கப்பலின் வருக்கை இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கப்பல் வருகையை காலவரையற்று தாமதப்படுத்துமாறு இலங்கை கேட்டுக் கொண்டது. இருப்பினும், சீனா திரும்பாமல் இருந்தது அந்தக் கப்பல். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை உளவு கப்பலுக்கு இலங்கை மீண்டும் அனுமதி அளித்தது. அதன்படி உளவுக் கப்பல் இலங்கை துறைமுகத்திற்குச் சென்றுள்ளது.

இந்தியா

இந்தியா

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன உளவு கப்பலை நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும், எந்தவொரு ஆராய்ச்சியும் மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. யுவான் வாங் 5 உளவு கப்பல் வருகை குறித்து தங்களுக்குத் தெரியும் என்றும் நிலைமையை உற்றுக் கவனித்து வருவதாகவும் மத்திய அரசு கடந்த மாதமே தெரிவித்து இருந்தது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலனைப் பாதிக்கும் செயல்களுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறி இருந்தது.

 யுவான் வாங் 5

யுவான் வாங் 5

சீனாவின் ஜியாங்னான் கப்பல் கட்டும் தளத்தால் கட்டப்பட்ட யுவான் வாங் 5, 2005 முதல் சீன கடற்படையில் உள்ளது. சீனா இதை ஒரு ஆராய்ச்சிக் கப்பல் என்று அழைத்தாலும், இந்தக் கப்பலுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள்களைக் கண்காணிக்கும் திறன் கொண்டது. 222 மீட்டர் நீளமும் 25.2 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பல் 2007 முதல் பல்வேறு மிஷன்களில் ஈடுபடுத்தப்பட்டது.

 750 கிலோமீட்டர்

750 கிலோமீட்டர்

யுவான் வாங் 5 உளவு கப்பல் 750 கிலோமீட்டர் ரேஞ்சை கொண்டு உள்ளது. அதாவது 750 கிலோமீட்டர் தூரம் வரை இருக்கும் பகுதிகளில் ஏவுகணைகளின் செயல்பாடுகளை உளவு கப்பலால் துல்லியமாகக் கண்காணிக்க முடியும். அதாவது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தையும் இது கண்காணிக்க முடியும். டெக்கன் பகுதியில் உள்ள ஏவுகணைகளையும் இதனால் கண்காணிக்க முடியும்.

 மறைமுகமாக

மறைமுகமாக

இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் சீனா, யுவான் வாங் 5 மூலம் அதை அடைய விருபும்வதாக சீனா குற்றஞ்சாட்டி உள்ளது. சீனாவின் ஆதிக்கத்தைச் சமாளிக்க உருவாக்கப்பட்ட அமெரிக்கா , ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய குவாட் நாடுகளும் சீனாவின் இந்த அத்துமீறல் நடவடிக்கையை உற்றுப் பார்த்து வருகின்றன. இந்த குவாட் கூட்டமைப்பைச் சீனா எப்போதும் எதிர்த்தே வருவது குறிப்பிடத்தக்கது.

விளக்கம்

விளக்கம்

அதேநேரம் நிலைமையைச் சமாளிக்க இந்தியா தாயாராகவே உள்ளதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. சீன கப்பல் இலங்கைக்குச் சென்று சேர்வதற்கு ஒரு நாள் முன்னதாக தான் இந்தியா டிரோன் விமானம் ஒன்றைப் பரிசாக அளித்திருந்தது. இலங்கையும் கூட இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே எவ்வித ஆய்வுப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
India is watching closley the movement of China spy ship in Sri Lanka: (இலங்கையில் உள்ள சீன கப்பல் ஏன் முக்கியம்) All things to know about China spy ship in Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X