கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐ.எஸ்.. 4 குடும்பங்கள்.. 32 தீவிரவாதிகள்.. அன்றே எச்சரித்த இலங்கை மாஜி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சே

By Staff
Google Oneindia Tamil News

Recommended Video

    SRILANKA NEWS: இலங்கையில் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு- வீடியோ

    கொழும்பு: இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு பிரபல தலைவர்கள் ஆதரவு தருவதாக 3 ஆன்டுகளுக்கு முன்பே இலங்கை அமைச்சராக இருந்த விஜயதாஸ ராஜபக்சே எச்சரித்திருந்தார். அவர் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இலங்கையில் அடுத்தடுத்து நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும் பிரபலங்களின் தொடர்புகள் இல்லாமல் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்காது என்பது வலுவடைந்து வரும் குற்றச்சாட்டு.

    Wijeyadasa rajapakshe warned on ISIS in 2016

    இந்நிலையில் இலங்கை காவல்துறை தலைவர் மற்றும் பாதுகாப்புத் துறையின் செயலர் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும்; இப்படி ஒரு தாக்குதல் நடைபெறக் கூடும் என உளவுத்துறை எச்சரித்த தகவலை மறைத்து மக்களை பலி கொடுத்துவிட்டனர் இருவரும்.. என அதிபர் சிறிசேனாவுக்கு விஜயதாஸ ராஜபக்சே கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

    இந்த விஜயதாஸ ராஜபக்சே வழக்கறிஞர். மகிந்த ராஜபக்சேவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது ஆட்சிக் காலத்தில் நியமன எம்.பியானார். ராஜபக்சே ஆட்சியிலும் பின்னர் ரணில் ஆட்சியிலும் அமைச்சராகவும் பதவி வகித்தார். தற்போது எம்.பி. யாக உள்ள விஜயதாஸ ராஜபக்சே, இலங்கையில் சீனா முதலீடுகளை கடுமையாக விமர்சித்தார்.

    9 மனித வெடிகுண்டுகளில் ஒருவர் பெண்.. இலங்கை பாதுகாப்பு அமைச்சர் பரபர தகவல்9 மனித வெடிகுண்டுகளில் ஒருவர் பெண்.. இலங்கை பாதுகாப்பு அமைச்சர் பரபர தகவல்

    மேலும் இலங்கை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சராக இருந்த 2016‍ம் ஆன்டு இலங்கை நாடாளுமன்றத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் இலங்கையில் ஊடுருவியுள்ளது; 4 முக்கிய தலைவர்களுக்கு இதில் தொடர்பு உண்டு; அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 32 பேர் தீவிரவாதிகள் என பகிரங்கமாக போட்டு உடைத்தார். ஆனால் அமைச்சராக இருந்த விஜயதாஸவின் பேச்சுக்கு சக அமைச்சர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தற்போது எம்பிக்கள் மற்றும் மாஜி ஆளுநர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அன்று விஜயதாஸ ராஜபக்சே தெரிவித்த கருத்து உண்மை என்பது தெரியவந்துள்ளது. மேலும் விஜயதாஸ ராஜபக்சேவும் இது தொடர்பான வீடியோவை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

    English summary
    Former Srilanka minister Wijeyadasa rajapakshe had warned on ISIS in 2016 at Srilanka Parliament.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X