For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6 மாதத்திலேயே பிறந்த குழந்தை.. உயிரை காக்க போராடும் தாய் பிரமிளா.. உதவிக் கரம் நீட்டுங்களேன்

பிரமிளாவின் பெண் குழந்தைக்கு NICU எனப்படும் குழந்தைகளுக்கான ஐசியூவில் சிகிச்சை மேற்கொள்ள உங்களின் உதவி தேவைப்படுகிறது.

சென்னை: பிரமிளாவின் பெண் குழந்தைக்கு NICU எனப்படும் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை மேற்கொள்ள உங்களின் உதவி தேவைப்படுகிறது. அந்த குழந்தைக்கு மேலும் மூன்று மாதம் சிகிச்சை செய்ய கொஞ்சம் பண உதவி செய்யுங்கள்.

உங்களின் சிறு குழந்தையை மிக மோசமான உடல் நிலையில் பார்க்கும் போது, உங்கள் இதயம் எப்படி நொறுங்கும் என்பதை என்னால் விவரிக்க முடியாது. எனக்கு ஒரு குழந்தைக்கு தாய் ஆக வேண்டும் என்று பல வருட ஆசை. ஆனால் எனக்கு குழந்தை பிறந்த உடனே என்னுடைய கனவு எல்லாம் சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியது.

குழந்தை பிறந்த உடனேயே உடல் நலம் குன்றியது. நான் இப்போது தாயாக இருக்கிறேன். ஆனால் அந்த குழந்தை என்னுடன் இல்லை. என்னுடைய பெண் குழந்தை இன்குபேட்டரில் (incubator) உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறாள்.

அவளை காக்க முடியுமா என்று கூட என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை என்று அந்த சிறு பிஞ்சு குழந்தையின் தாய் பிரமிளா கூறியுள்ளார்.

நவம்பர் 25ம் தேதி பிரமிளா வயிற்று வலி ஏற்பட்டு, அதீத ரத்த போக்குடன் எழுந்தார். அப்போது அவரை அவரின் கணவர் ஆண்ட்ரு உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். வேக வேகமாக அவருக்கு எமர்ஜென்சி பிரிவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

நீண்ட நேர சிகிச்சைக்கு பின், அந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பதை தாமதம் செய்யும் ஊசி போடப்பட்டது. ஆனால் எதுவும் உதவவில்லை. அவரின் வயிற்று வலி மிக மோசமானது. வலியை பிரமிளா கத்திக் கொண்டே இருந்தார்.

இதையடுத்து அவசர அவசரமாக சி செக்சன் மூலம் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து குழந்தை எடுக்கப்பட்டது. அது பெண் குழந்தை. ஆனால் குழந்தை பிறந்து சில மணி நேரம் ஆகியும் கூட அது கண்ணீர் விடவே இல்லை.

இது குறித்து பிரமிளா பேசும் போது, அந்த குழந்தை கத்தவில்லை, அழவில்லை. எந்த சத்தமும் இல்லை. உடனே குழந்தைக்களுக்கான அவசர சிகிச்சை பிரிவான NICUவிற்கு என்னுடைய குழந்தையை மருத்துவர்கள் கொண்டு சென்றனர்.

அவள் மிகவும் சிறியதாக இருந்தாள். அவளை அப்படி பார்க்க எனக்கு கஷ்டமாக இருந்தது. உலகில் எந்த பெற்றோருக்கும் இப்படி ஒரு நிலை வர கூடாது, என்று பிரமிளா குறிப்பிட்டுள்ளார். அவளின் எடை வெறும் 600 கிராம்தன இருந்தது.

அவளுக்கு respiratory distress எனப்படும் குறைபாடு உட்பட பல உயிரை குடிக்கும் குறைபாடுகள் இருந்தது. 6 மாதத்திலேயே குழந்தை பிறந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தனை நாட்கள் எனக்கு என்னுடைய குழந்தையை கையில் தூக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அன்று எனக்கு அந்த தைரியம் இல்லாமல் போய்விட்டது. அன்று குழந்தையை பார்த்த போது, எனக்கு அந்த தைரியம் வரவில்லை என்று, பிரமிளா குறிப்பிட்டுள்ளார்.

எல்லாமே எனக்கு தூரத்து நிறைவேறாத கனவு போல இருக்கிறது என்று அழுதுகொண்டே பிரமிளா குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய குழந்தைக்காக அவரே செய்த சிறிய தவளை பொம்மையை வைத்து அவர் அழுதுகொண்டே இதை குறிப்பிட்டார்.

அந்த குழந்தை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறாள். ஆனால் அவளுக்கு சிகிச்சை செய்ய பிரமிளா குடும்பத்திடம் பணம் இல்லை.

பிரமிளாவின் மகளின் உடல் நிலை சரியாகி வருகிறது. ஆனால் குழந்தைக்கு இன்னும் மூன்று மாதங்கள் சிகிச்சை செய்ய வேண்டும். இந்த சிகிச்சையை மேற்கொள்ள 15 லட்சம் ரூபாய் செலவு ஆகும். அவ்வளவு பணம் பிரமிளா குடும்பத்திடம் இல்லை.

என்னுடைய குழந்தையை பிறக்கும் முன்னே நான் இழந்துவிட்டேன். இப்போது எனக்கு கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது. நான் என் குழந்தையை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியும். என்னால் அம்மா ஆக முடியும். எனக்கு என்னுடைய குழந்தை வேண்டும்.

என்னுடைய குழந்தையை என்னிடம் இருந்து கொண்டே செல்ல வேண்டாம், என்று பிரமிளா குறிப்பிட்டுள்ளார். பிரமிளாவின் கணவர் ஆண்ட்ரு ஜிம்மில் வேலை பார்க்கிறார். அவருக்கு 8000 ரூபாய்தான் சம்பளம் . இந்த சம்பளத்தில் குழந்தைக்கு சிகிச்சை செய்ய முடியாது.

அந்த குழந்தை உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

நீங்கள் குழந்தை உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த குழந்தை உயிரை காத்திடும்.

இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!

Ketto.org is a leading crowdfunding platform that supports crowdfunding for cancer, heart and many other treatments.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X