• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தடுப்பூசி - விலை, பதிவு செய்யும் முறை, பக்கவிளைவுகள்.. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

|

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் சில பகுதிகளில் தட்டுப்பாடு காரணமாகத் தடுப்பூசி மையங்களுக்கு வரும் மக்களைத் திருப்பி அனுப்பும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது.

நாடு முழுவதும் உள்ள மருந்தகங்கள் பல்வேறு மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது . இது கள்ளச் சந்தையில் மருந்துகள் அதிக விலைக்கு விற்க வழிவகை செய்கிறது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர், மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

Corona Vaccine Update: Price, registration, side-effects; All your FAQs answered

3ஆம் கட்ட தடுப்பூசி பணிகளில் யார் சேர்க்கப்பட்டுள்ளனர்?

நாடு முழுவதும் உள்ள தடுப்பூசி மையங்களில் மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த அரசு அனுமதித்துள்ளது.

மே 1 முதல் வேறு மாற்றங்கள் என்ன?

மே 1ஆம் தேதி முதல், மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசிகளை நேரடியாகக் கொள்முதல் செய்துகொள்ளலாம்.

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமா?
45 வயதிற்கு மேற்பட்டவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மத்திய அரசு தனது இலவச தடுப்பூசி பணியைத் தொடரும். தனியார் மருத்துவமனைகளில், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரூ .250க்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்

கோவிஷீல்டு தடுப்பூசி விலை என்ன?

மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ .400 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ .600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் எது சிறந்தது?

இந்தியாவில் பயன்படுத்தப்படும் இரண்டு தடுப்பூசிகளில் ஒன்று மட்டும் சிறந்தது எனக் கூற முடியாது. இரண்டு தடுப்பூசிகளை கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பலன் தருகின்றன. ஒருவரும் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. மேலும், வயதானவர் மற்றும் இணை நோய் உள்ளவர்களின் உயிரிழப்புகளைத் தடுக்கிறது.

கொரோனா தடுப்பூசிக்கு நான் எப்போது பதிவு செய்யலாம்?

ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் மத்திய அரசின் கோவின் தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

எப்படி நான் பதிவு செய்ய வேண்டும்?

தேவைப்படும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களால் முன்பதிவு செய்துகொள்ள முடியும். கோ-வின் தளத்தில் சென்று முன்பதிவு செய்ய வேண்டும். https://www.cowin.gov.in/home

நான் எங்கு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முடியும்?

கொரோனா தடுப்பூசி மையங்கள் என அழைக்கப்படும் அரசு மற்றும் தனியார் சுகாதார மையங்களில் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளலாம்.

இரண்டாவது டோஸை எடுத்துக்கொள்ள மீண்டும் பதிவு செய்ய வேண்டுமா?

இல்லை. ஒருமுறை பதிவு செய்தால் போதும். முதல் டோஸுக்குப் பிறகு 29 நாட்களில் அதே மையத்தில் ஒருவருக்கு இரண்டாவது டோஸுக்கு தானாகவே பதிவு செய்யப்படும்.

பதிவு செய்யாமல் கொரேனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியுமா?

முடியாது. கொரோனா தடுப்பூசி போட ஒருவர் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். பதிவுசெய்ததும், தடுப்பூசி போடும் தேதி மற்றும் நேரம் குறித்த தகவல்கள் பயனாளியுடன் பகிரப்படும். மேலும், மையங்களில் நேரடியாகச் சென்றும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கும் முன்பதிவு தேவை.

முன்பதிவு செய்ய என்ன ஆவணங்கள் தேவை?

புகைப்படத்துடன் கூடிய கீழே குறிப்பிடப்பட்டுள்ள எதாவது ஒரு ஐடி இருந்தால் போதும்:

  • ஆதார் அட்டை
  • ஓட்டுநர் உரிமம்
  • தொழிலாளர் அமைச்சின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை அட்டை
  • எம்.பி. எம்எல்ஏ ஐடி கார்டுகள்
  • பான் கார்டு
  • வங்கி/ தபால் அலுவலக பாஸ்புக்
  • பாஸ்போர்ட்
  • பென்சன் ஆவணம்
  • மத்திய, மாநில, பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய ஐடி கார்டு
  • வாக்காளர் அடையாள அட்டை
  • மாற்றுத்திறனாளிகள் மருத்துவரிடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும்
  • பதிவு செய்யும்போது புகைப்பட அடையாள அட்டை தேவையா?
  • ஒருவர் பதிவு செய்யும் சமர்ப்பித்த புகைப்பட ஐடியை தடுப்பூசி போடும்போதும் அளிக்க வேண்டும்.

தடுப்பூசி போட வேண்டிய தேதி குறித்த தகவல்களை ஒருவர் எவ்வாறு பெறுவார்?

ஆன்லைனில் பதிவு செய்தவுடன், ஒருவரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்குத் தேதி, இடம் மற்றும் தடுப்பூசி நேரம் குறித்து தகவல்கள் எஸ்எம்எஸ் செய்யப்படும்.

தடுப்பூசி போட்ட பிறகு தடுப்பூசி குறித்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுமா?

ஆம். கொரோனா தடுப்பூசியை ஒருவர் பெற்றவுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு இது குறித்த தகவல்களை எஸ்எம்எஸ்-ஆக பெறுவார். இரண்டு டோஸ்கள் முடிந்த பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு QR குறியீடு அடிப்படையிலான சான்றிதழ் அனுப்பப்படும்.

இரண்டு தடுப்பூசிகளுக்கும் இடையே உள்ள கால இடைவெளி என்ன?

கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கு இடையேயான காலம் 4-8 வாரங்களாக இருக்கலாம். கோவாக்சினுக்கு இது நான்கு முதல் ஆறு வாரங்களாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

நான் எந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என நான் தேர்வு செய்யலாமா?

கையிருப்பு மற்றும் விநியோகத் திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுகிறது. எனவே, ஒருவர் விருப்மும் தடுப்பூசியைத் தேர்ந்தெடுக்க முடியாது

கொரோனா தடுப்பூசிகள் மருந்தகம் / மருத்துவ கடைகளில் கிடைக்குமா?

கிடைக்காது. தடுப்பூசிகள் தற்போது அவசரக்கால பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. எனவே, தனியார் சந்தையில் விற்க அனுமதி இல்லை.

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப் பதிவு செய்ய வேண்டுமா?

தனியார் மற்றும் அரசு என இரு மருத்துவமனைகளுக்கும் பதிவு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

தற்போது நடைபெறும் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் எதாவது மாற்றம் இருக்குமா?

சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு அறிவித்தபடி இலவசமாகத் தடுப்பூசிகள் செலுத்தப்படும்.

கொரோனா சிகிச்சையில் ரெம்டெசிவிர் பயனுள்ளதாக இருக்குமா?

இல்லை, ரெம்டெசிவிர் ஒன்றும் மந்திர மருந்து இல்லை. அது உயிரிழப்புகளைக் குறைக்கும் மருந்து இல்லை.

அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயமா?

கொரோனா தடுப்பூசி என்பது விருப்பம் உள்ளவர்களுக்குத் தான். இருப்பினும் இந்த நோயிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒருவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சக ஊழியர்கள் உள்ளிட்ட நெருங்கிய தொடர்புகளுக்கு இந்த நோய் பரவுவதைத் தடுக்க முடியும்.

குறுகிய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி பாதுகாப்பாக இருக்குமா?

அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை ஒழுங்குமுறை அமைப்புகள் சோதனை செய்து, அனுமதி அளித்த பிறகே தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருகிறது.

தடுப்பூசிக்குப் பிறகு உடலில் ஏற்படும் அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், குளிர், உடல் வலி, சோர்வு, சிவத்தல் மற்றும் ஊசி போடும் இடத்தில் வலி. இவை ஏற்பட்டால் சாதாரண பாராசிட்டமால் எடுத்துக் கொள்ளலாம். 2-3 நாட்களில் இது சரியாகிவிடும்.

கர்ப்பிணிப் பெண் அல்லது தாய் பால் கொடுக்கும் தாய் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

தற்போதுள்ள விதிகளின்படி சமீபத்திய விதிமுறைப்படி,கர்ப்பிணிப் பெண் அல்லது தாய் பால் கொடுக்கும் தாய் தடுப்பூசி போட அறிவுறுத்தப்படுவதில்லை.

இதய நோயாளிகள் தடுப்பூசி எடுக்க முடியுமா?

எடுத்துக்கொள்ளலாம்.

தடுப்பூசியின் பக்க விளைவுகள் என்ன?
ஒட்டுமொத்தமாக, இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை. உலகளவில் இரண்டு கோடிக்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. அவற்றின் மிகச் சிலருக்கே அரிதான பக்க விளைவுகளின் ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசியின் பக்க விளைவுகள் பற்றி நான் கவலைப்பட வேண்டுமா?

தடுப்பூசியின் இரண்டாவது டோஸுக்குப் பிறகு சோர்வு, தலைவலி, தசை வலி மற்றும் காய்ச்சல் ஆகியவை அதிகம் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் லேசானவைதான். இவை சில நாட்கள் மட்டுமே நீடிக்கும். எனவே பக்க விளைவுகள் குறித்து நீங்கள் அதிகம் கவலைப்பட தேவையில்லை.

2 வது டோஸை தாமதப்படுத்தினால் என்ன நடக்கும்?

ஒருவர் தனது முதல் டோஸை எடுத்துக் கொண்ட பிறகு , இரண்டாவது டோஸ் பெற இரண்டு மாதங்கள் வரை தாமதப்படுத்தலாம். இரண்டாவது டோஸை எடுத்துக் கொள்ளாவிட்டாலும் பெரிய பிரச்சினைகள் எதுவும் இருக்காது. 2 மாதங்கள் வரை ஒன்றும் பிரச்சினையில்லை. அதன்பிறகு முதல் டோஸ் பெற்றுக் கொண்டவர் சில நோயெதிர்ப்பு சக்தியைப் பெற்றாரா? என்பதை உறுதிப்படுத்த ஆன்டிபாடி சோதனைக்கு செல்லலாம்.

1-வது மற்றும் 2 வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட பின்பும் எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுமா ?

தடுப்பூசி போட்ட பின்பும் கொரோனா வைரஸுக்கு எதிராக நமது உடல் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க இரண்டு வாரங்கள் ஆகும். எனவே தடுப்பூசி வேலை செய்ய போதுமான நேரம் இல்லாததால், ஒரு நபர் தடுப்பூசிக்கு முன்னும் பின்னும் கொரோனா பாசிட்டிவ் பெறலாம்.

முழுமையாக தடுப்பூசி போட்ட பிறகு எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது?

அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி சுமார் 0.04% மக்கள் கோவாக்சின் இரண்டாவது டோஸுக்குப் பிறகு கொரோனா பாஸிட்டிவ் பெற்றுள்ளனர். கோவிஷீல்ட்டின் இரண்டாவது டோஸுக்குப் பிறகு 0.03% பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதாவது கோவிஷீல்ட் டோஸைப் பெற்ற 10,03,02,745 பேரில் 17,145 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் கோவாக்சின் முதல் அளவைப் பெற்ற 93,56,436 பேரில் 4,208 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்ட பின்னர் பக்க விளைவுகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

இரண்டு தடுப்பூசிகளும் மிகவும் பாதுகாப்பானவைதான் . ஆனால் ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு செல்ல வேண்டும். இல்லையெனில் கோ-வின் ஆப்-பில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மூலம் சுகாதார ஊழியரை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம்.

கொரோனா தடுப்பூசி பெற்ற பிறகு ஏற்படும் பொதுவான பக்க விளைவுகள் என்ன?

உடல் சோர்வு, தலைவலி, தசை வலி மற்றும் காய்ச்சல், லேசான மயக்கம் வருதல் போன்றவை பொதுவான பக்க விளைவுகள் ஆகும்.

ஒரு தடுப்பூசியிலிருந்து உடல் நல பாதுகாப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்?

தடுப்பூசி போட்ட நபர்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி நீடிக்கும் திறனின் கால அளவு இன்னும் துல்லியமாக தெரியவில்லை. எனவே தொற்றில் இருந்து விலகி இருக்க மாஸ்க் அணிதல், அடிக்கடி கை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கையை தொடர்ந்து பின்பற்ற அறிவுறுத்தப்படுக்கிறது.

தடுப்பூசி போட்ட பின்னர் நான் மாஸ்க் அணிய வேண்டுமா?

கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். தடுப்பூசியைப் பெற்ற அனைவரும் தொடர்ந்து மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதாவது உங்களையும், உங்களை சுற்றி உள்ளவர்களையும் தொற்றில் இருந்து தடுக்க பாதுகாப்பு வழிமுறைகள் மிகவும் அவசியம்.

 
 
 
English summary
Corona Vaccine All FAQs answered.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X