கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கடன் தரமாட்டயா.. கொரோனாவை வைத்து கோழிக்கடைக்காரரை பழிவாங்கிய சிறுவன்.. பீதிக்குள்ளான நெய்வேலி

Google Oneindia Tamil News

கடலூர்: நெய்வேலியில் இந்த கடையில் கோழிக்கறி சாப்பிடாதீங்க... கொரோனா வைரஸ் வந்துடும் என்று கோழிக்கறி கடன் தராத கடை உரிமையாளரை வாட்ஸ்ஆப் வழியாக சிறுவன் பழிவாங்கி உள்ளான். அவனை புகாரின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் சுமார் 2800 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 80 ஆயிரம் கொரோனாவா வைரஸ் 78 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து, ஈரான், இத்தாலி, சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, வடகொரியா உள்ளிட்ட நாடுகளூக்கு பரவிவிட்டது. அந்த நாடுகளில் மக்கள் அச்சத்துடன் உள்ளார்கள்.

ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் குறித்த பீதி சுத்தமாக இல்லை. கேரளாவில் 3 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். 3பேரும் குணமாகிவிட்டனர். ஆனால் அவ்வப்போது கொரோனா குறித்த பீதி கிளம்பி வருகிறது.

கூட்டணிகள் மாறும்.. வாய்ப்பை மிஸ்பண்ணக்கூடாது.. தேமுதிகவின் எம்பி சீட் கணக்கு இதுதான்!கூட்டணிகள் மாறும்.. வாய்ப்பை மிஸ்பண்ணக்கூடாது.. தேமுதிகவின் எம்பி சீட் கணக்கு இதுதான்!

 இறைச்சிக் கடை

இறைச்சிக் கடை

இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் இப்படியாக ஒரு வாட்ஸ் அப் தகவல் வேகமாக பரவியது. அதன்படி "கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கோழி இறைச்சி கடை ஒன்றில், இறைச்சி வாங்கி சாப்பிட்ட நபர் ஒருவர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர், நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். "அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இப்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது," என வாட்ஸ் அப் தகலில் இருந்தது.

இறைச்சி வாங்க மறுப்பு

இறைச்சி வாங்க மறுப்பு

பீதி அடைந்தன்ர. இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த குறிப்பிட்ட இறைச்சி கடையில் மக்கள் அனைவரும் இறைச்சி வாங்குவதை தவிர்த்துவிட்டார்கள்.

சிறுவன் மீது புகார்

சிறுவன் மீது புகார்

அப்பகுதியில் வசிக்கும் உறவினர்களும், நண்பர்களும் இது குறித்து தீவிரமாக விசாரிக்கத் தொடங்கிய போத தான் கடையை பற்றி பரவிய வாட்ஸ் அப் தகவல் குறித்து கோழி கடை உரிமையாளருக்கு தெரியவந்திருக்கிறது இதனால் மனவேதனை அடைந்த கோழி இறைச்சி கடை உரிமையாளர், நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் தனது கடை குறித்து அவதூறு பரப்பிய சிறுவன் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்தார்.

வதந்தி பரப்பினான்

வதந்தி பரப்பினான்

அவர் தனது புகாரில் வதந்தியை பரப்பிய சிறுவன் அடிக்கடி காசு கொடுக்காமல் கறி வாங்கிக் கொண்டு தகராறு செய்து வந்தான். ஞாயிறு அன்று காலை அந்த சிறுவன் இறைச்சி கடன் கேட்டபோது தர மறுத்தேன். இதனால் என் கடை மீது களங்கம் ஏற்படுத்த வாட்ஸ்ஆப்பில் பொய்யான வதந்தியை பரப்பி உள்ளான். இதனால் என் கடைக்கு வாடிக்கையாளர் வராமல், நானும் எனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எனது வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து சிறுவனை போலீசார் பிடித்து வந்து விசாரித்தனர்.

விளக்க வீடியோ

விளக்க வீடியோ

அப்போது வேண்டுமென்றே வதந்தியை பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து வதந்தி பரப்பிய சிறுவன் மீது, தவறான தகவலைப் பரப்புதல் மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தார்கள் அந்த சிறுவனுக்கு 17வயது என்பதால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினார்கள். வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க, தவறான தகவல் பரப்பிய அந்த சிறுவனே பேசும் வகையில் வீடியோ ஒன்றை எடுத்து வாட்ஸ்அப்பில் வெளியிட்டார்கள்.

English summary
17 year old teen crat fake corono virus news in whatsapp against chicken shop in neyveli due to credit problem
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X