கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காத்திருந்த மஞ்சுளா.. பழிக்கு பழி.. ரவுடி கோழி பாண்டியன் கொலையில் பெண் உட்பட 4 பேர் கைது

ரவுடி கோழி பாண்டியனை வெட்டி கொன்றதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Rowdy Kozhi Pandiyan : ரவுடி கோழி பாண்டியன் கொலை..சிதம்பரத்தில் பரபரப்பு - வீடியோ

    சிதம்பரம்: ரவுடி கோழி பாண்டியனை கொலை செய்த விவகாரத்தில் பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சிதம்பரத்தில் பெரிய ரவுடிதான் கோழிபாண்டியன். வயசு 35. நிறைய வழக்குகள் இவர் மீது உள்ளன. கடந்த 20-ம்தேதி இரவு, இவர் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டே இருந்த பாண்டியன் மீது வெடிகுண்டை வீசியது ஒரு மர்மகும்பல்.

    இதில் அங்கேயே உடல் சிதறி விழுந்த கோழி பாண்டியனை, ஆத்திரம் தீராத அந்த கும்பல் அரிவாளால் வெட்டி சாய்த்து தப்பித்துவிட்டது. அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 தனிப்படையும் அமைத்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் இது பழிக்குப் பழியாக நடந்த கொலை என்பது தெரியவந்துள்ளது.

    "கம்பெனி" தர்றீங்களா.. அத்துமீறிய நபரை நடுரோட்டிலேயே புரட்டி புரட்டி எடுத்த பெண்கள்.. பரபர வீடியோ!

    இரட்டை கொலை

    இரட்டை கொலை

    கடந்த 5 வருஷத்துக்கு முன்பு கலுங்குமேடு பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் குமார், அவரது தம்பி ராஜேஷ் மீது மர்மநபர்கள் வெடிகுண்டு வீசியதுடன், இருவரையும் அரிவாளாலேயே வெட்டி கொன்று ராஜா முத்தையா ஆஸ்பத்திரி முன்பு வைத்து விட்டு சென்றார்கள். இந்த இரட்டை கொலைக்கு பக்கத்து வீட்டுக்காரர் கோழி பாண்டியன் தான் கொலையாளிகளுக்கு துப்பு கொடுத்ததாக கூறப்பட்டது.

    மஞ்சுளா

    மஞ்சுளா

    இந்த ஆத்திரம்தான் கோழிபாண்டியன் மீது ஆம்புலன்ஸ் குமார் குடும்பத்துக்கு இருந்து வந்துள்து. அதனால் ஆம்புலன்ஸ் குமாரின் தந்தை மணி, மனைவி மஞ்சுளா 34, உறவினர்கள் சரத், ஜெயசீலன், ராஜா, ஆகியோர் கோழிபாண்டியனின் உயிரை காவு வாங்க காத்துக் கொண்டிருந்தனர். இதற்காகவே நாட்டு வெடிகுண்டுகளையும் வாங்கி தயாராக வைத்திருந்தனர்.

    நாட்டு வெடிகுண்டு

    நாட்டு வெடிகுண்டு

    எதிர்பார்த்த சந்தர்ப்பம், கடந்த 20-ந் தேதி வந்தது. ராஜா முத்தையா ஆஸ்பத்திரி அருகே உள்ள ஒரு ஓட்டலில் கோழிபாண்டியன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதே, மணி, சரத் உள்ளிட்டோர் அங்கு சென்று நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் கோழி பாண்டியன் உடல் சிதறியது. அதற்கு பிறகும் வெறி அடங்காமல் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பியது அந்த கும்பல் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சரண்

    சரண்

    இதையடுத்து அதே பகுதியில் பதுங்கி இருந்த மணி, ஜெயசீலன், ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முத்தையா நகரில் உள்ள தனியார் பள்ளி அருகே மஞ்சுளா பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு சென்று அவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சரத், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஆக மொத்தம் கோழி பாண்டியன் கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    English summary
    4 People including a woman have arrested by Cuddalore Police in Rowdy Kozhi Pandiayan murder case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X